[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

காவிரி விவகாரம்: மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா முக்கிய ஆலோசனை

cauvery-issue-chief-minister-jayalalithaa-discussion-in-apollo-hospital

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, காவிரி விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

காவிரி நீர் விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுக்கள் தொடர்பாகவும், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் குறித்தும் முதலமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்துக் கூறினர்.

இந்த கூட்டத்தில் தலைமைச் செயலர் ராம மோகன ராவ், தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர்‌ பங்கேற்றனர். காவிரி வழக்கில் கர்நாடக அரசு மேலும் 3 நாளைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட உத்தரவிட்டது குறித்தும் முதலமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

காவிரி விவகாரத்திற்கு தீர்வு காண மத்திய நீர்வள அமைச்சகம் தகுந்த அறிவுரைகளை வழங்க, இரு மாநில நிர்வாகத் தலைவர்கள் கூட்டத்தை உச்சநீதிமன்றம் கூட்ட உத்தரவிட்டது குறித்தும் அதிகாரிகள் முதலமைச்சரிடம் கூறினர்.

இதன்படி நாளை டெல்லியில் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.‌ இக்கூட்டத்தில், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலர், முதன்மைச் செயலர் பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்திய முதலமைச்சர், கூட்டத்தில் தனது உரையை தலைமைச் செயலர் வாசிக்கவும் ஆலோசனை வழங்‌கியதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close