[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்
  • BREAKING-NEWS பழனி கோயில் உற்சவர் சிலை முறைகேடு வழக்கை ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் விசாரிக்க உத்தரவு; சிபிசிஐடி விசாரிக்க தடை - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS அனுமதி மறுக்கப்பட்ட சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவர் - சென்னை காவல்துறை
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகளோ, திசு மாதிரிகளோ தங்களிடம் இல்லை- அப்போலோ மருத்துவமனை
  • BREAKING-NEWS லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரித்து வரும் குட்கா முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றியது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி
  • BREAKING-NEWS காவிரி விவகாரத்தில் அதிமுக ஆட்சியில் எதையும் எதிர்பார்க்கமுடியாது- துரைமுருகன்

'வாழும்போது ரத்ததானம், வாழ்ந்த பிறகு உடல்தானம்'.... விழிப்புணர்வு மாராத்தான்

awareness-marathon-in-trichy

உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி தனியார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் திருச்சியில் விழிப்புணர்வு மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது.

‘வாழும்போது ரத்ததானம், வாழ்ந்த பிறகு உடல்தானம்’ என்ற கருத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட மராத்தானில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியே 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் என்ற பிரிவுகளில் நடைபெற்றது. தென்னூர் உழவர்சந்தை மைதானத்திலிருந்து தொடங்கிய மராத்தான் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

இதில் ஆண்களுக்கான 21 கிமீ பிரிவில் ஜோஸ்வா, சூர்யா ஆகியோர் முதல் 2 இடங்களைப் பிடித்தனர். பெண்கள் பிரிவில் கஸ்தூரி, ரேணுகா ஆகியோர் முதல் 2 இடங்களை பிடித்தனர். 10கிமீ ஆண்கள் பிரிவில் கார்த்திக், எஸ்.ஜெ.சவான் ஆகியோர் முதல் இரு இடங்களையும் பெண்கள் பிரிவில் ஆர்.ஜோதி, அர்ச்சனா ஆகியோர் முதல் 2 இடங்களையும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழுடன் ரொக்க தொகையும் பரிசாக வழங்கப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close