[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு

மீனவர்கள் போராட்டத்தில் போலீசாருடன் தள்ளுமுள்ளு: பெண்கள் தீக்குளிப்பு முயற்சி

clash-in-fishermen-protest-in-tiruvallur

திருவள்ளூரில் மீனவர்கள் ந‌டத்திய உண்ணாவிரத போராட்டத்தின்போது, அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திற்கு நிலம் வழங்கிய விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி திருவள்ளூர் மாவட்டம் கரிமணல் பகுதி மீனவர்கள் உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற இடத்தில் திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் ஆகியோர் மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்படதாததால், அங்கிருந்த பெண்கள் சிலர் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைக்க முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து மீனவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக முதல்வரிடம் மனு அளிக்கப்போவதாக கரிமணல் பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close