[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பழைய மரப்பொருட்கள் விற்பனை கடையில் தீ விபத்து
  • BREAKING-NEWS சிறுமிகளை வன்கொடுமை செய்தால் தூக்கு- குடியரசுத்தலைவர் ஒப்புதல்
  • BREAKING-NEWS கிருஷ்ணகிரி சாந்தி நகரில் வீட்டில் ஏசி வெடித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியை அஞ்சலாமேரி உயிரிழப்பு
  • BREAKING-NEWS விருதுநகர்: சாத்தூர் அருகே சல்வார்பட்டியில் குடும்பப் பிரச்னையால் 2 குழந்தைகள் கழுத்தறுத்துக்கொலை
  • BREAKING-NEWS வேலைக்குச் செல்லும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்ப முடியாத நிலை உள்ளது - கனிமொழி
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும் - அமைச்சர் உதயகுமார்
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்துக்கான மத்திய சுற்றுச் சூழல்துறை அனுமதியை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் மனு தாக்கல்

டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா மரணம்: ஓராண்டாகியும் முன்னேற்றம் இல்லா வழக்கு விசாரணை

one-year-completes-in-dsp-vishnupriya-dead

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்‌.பியாக இருந்த விஷ்ணுபிரியா மரணமடைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. எனினும் அவரது மரணம் தொடர்ப‌ன வழக்கில் முன்னேற்றம் ஏற்படாதது வருத்தமளிப்பதாக அவரது பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா கடந்த ஆண்டு இதே நாளில்தான் உயிரிழந்தார். உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், விஷ்ணு பிரியா மரணம் தொடர்பான வழக்கில் முன்னேற்றம் ஏற்படாதது வருத்தம் அளிப்பதாக அவரது பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். விஷ்ணுப்பிரியா விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சில வழக்குகளில் அவருக்கு உண்மை தெரியவந்ததாலேயே கொலை செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா மரணத்துக்கு பிறகு அவர் பயன்படுத்திய செல்போன், லேப்டாப் மற்றும் சில உடைமைகளை காவல் துறையினர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க அரசு அழுத்தம் தர வேண்டும் என கூறும் பெற்றோர்,‌ சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close