[X] Close
JUST IN
மாவட்டம் 17 Sep, 2016 08:43 AM

சென்னை சென்ட்ரலில் இருந்து 2 நாட்களுக்கு புறநகர் ரயில்கள் இயங்காது...தெற்கு இரயில்வே அறிவிப்பு

chennai-local-train

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் புறநகர் மின்சார ரயில்கள் இன்றும் நாளையும் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ‌எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை விரிவாக்க பணிகள் நடப்பதால் இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதன்படி திருத்தணி, ஆவடி, அரக்கோணம், பட்டாபிராம், சூலூர் பேட்டை, கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார இரயில்கள் சென்னை கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும்.

கோரக்பூரிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரப்தி சாகர் விரைவு வண்டியும் , தன்பாத் ஆலப்புழா விரைவு வண்டியும் பெரம்பூரில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. இந்த மாற்று ஏற்பாடுகள் குறித்து மக்களுக்கு ஏற்கனவே அறிவித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close