[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
  • BREAKING-NEWS “ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது
  • BREAKING-NEWS “ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி

நிலைத்தன்மை, அமைதியை உறுதிபடுத்த வேண்டும்: பாதுகாப்புப் படையினருக்கு பிரணாப் முகர்ஜி வேண்டுகோள்

president-pranab-mukherjee-in-chennai

இந்தியாவில் நிலைத்தன்மையும், அமைதியும் நிலவுவதை பாதுகாப்புப் படையினர் உறுதி செய்ய வேண்டும் என்று, குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டார்.

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், இந்தியாவைச் சேர்ந்த 32 பெண் வீரர்கள் உள்பட 249 வீரர்களும், ஆப்கன், பூடான் உள்ளிட்ட அண்டை நாடுகளைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 20 ராணுவ வீரர்களும் பயிற்சி முடித்துள்ளனர்.

இதற்கான நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். திறந்த ஜீப்பில் மைதானத்தில் வலம்வந்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத்தலைவர் ஏற்றுக் கொண்டார்.

ஓராண்டு வெற்றிகரமாக பயிற்சியை முடித்த 269 ராணுவ வீரர்களும் அதிகாரிகளாக பொறுப்பேற்க உள்ளனர். சிறப்பான பயிற்சி பெ‌ற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கி பிரணாப் முகர்ஜி சிறப்பித்தார்.இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் பேசிய பிரணாப் முகர்ஜி, பயிற்சி முடித்து பணிக்கு செல்லவுள்ள வீரர்களுக்கு முக்கிய பொறுப்பு காத்திருப்பதாக கூறினார். எல்லைப் பகுதிகளிலும், சர்வதேச நாடுகளிலும் இருந்தும் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறிய குடியரசுத்தலைவர், இதனை எதிர்கொண்டு இந்தியாவின் நிலைத்தன்மையும், அமைதியும் நிலவ பாதுகாப்புப் படையினர் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அப்போதுதான் இந்திய குடிமக்கள் அமைதி மற்றும் செழிப்புடன் நடைபோட முடியும் என்று தெரிவித்த பிரணாப் முகர்ஜி, பன்முகங்கள் கொண்ட இந்தியா, ஒரே அரசமைப்புச் சட்டத்தின் கீழ் செயல்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close