[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

காவிரி நதிநீர் விவகாரம்: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை

cauvery-water-issue-tn-cm-jayalalithaa-discussion-with-officers

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், காவிரி விவகாரம் தொடர்பான சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் குறித்தும், இரு மாநில சூழ்நிலைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக கர்நாடக எல்லைகளில் நிலவும் பதற்றத்தை போக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

சுமார் 1 மணி நேரமாக நடைபெற்ற இக்கூட்டத்தில், ஒ.பன்னீர் செல்வம், வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களும், பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகரன், அரசு வழக்கறிஞர் முத்துகுமாரசாமி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close