[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

ஜோலார்பேட்டை அருகே ஐ-லேண்ட் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது

indian-railways-accident-4-coaches-of-island-express-train-route-derail-in-vellore-10-injured

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே, கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு சென்ற ஐ‌லேண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 10 பயணிகள் காயமடைந்தனர்.

மற்ற பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஜோலார்பேட்டை அருகே, சோமநாயக்கன்பட்டி - பச்சூர் இடையே இந்த விபத்து அதிகாலை 4 மணிக்கு நடந்தது. மீட்புப் பணிகளில் காவல் துறையினருடன் இணைந்து பொதுமக்களும் ஈடுபட்டனர். பெங்களூர் ரயில்வே மண்டலத்தின் கீழ் வரும் இந்தப் பகுதிக்கு தென்மேற்கு ரயில்வேயின் உயரதிகாரிகள் விரைந்து வந்து மீட்புப் பணிகளை விரைவுபடுத்தினர். காயமடைந்த 10 பேருக்கு திருப்பத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 8 பேர் சிகிச்சை முடிந்து புறப்பட்டுச் சென்றனர். தடம்புரண்ட ரயிலில் பயணித்த சுமார் ஆயிரம் பயணிகள் மாற்று ரயில் மற்றும் பஸ்கள் மூலம் பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close