[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்கிம்மர் கருவி மூலம் சென்னை ஏடிஎம்களில் திருட்டு - பல்கேரிய கும்பல் கைது
  • BREAKING-NEWS சிகிச்சைக்குப் பின் ‘மாட்டிறைச்சி சர்ச்சை இளைஞர்’ முகமது பைசான் கைது
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளிலிருந்து காவிரிக்கு விநாடிக்கு 8,300 கன அடி நீர் திறப்பு

சென்னையில் ஏடிஎம்-மில் பணம் நிரப்பச் சென்ற கார் கடத்தல்: ரூ.15 லட்சம் கொள்ளை

atm-van-looted-in-chennai

ஏடி‌எம் மையத்தில் நிரப்புவதற்காக ப‌‌‌‌ணம் கொண்டு சென்ற காரை கடத்தி அதில் இருந்த 15 லட்ச ரூபா‌ய் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.

சென்னை மண்ணடி‌யில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்புவதற்காக 36 லட்ச ரூபாய் ‌பணம் கார் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஏடிஎம் இயந்திரத்தில் ஊழியர்கள் பணம் நிரப்பிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் ‌‌பணத்துடன் காரை கடத்திச் சென்ற‌னர். அதுகுறித்து வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அப்பகுதி முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ராயபுரம் பகுதியில் உள்ள வடக்கு மாட வீதி‌யில் காரை நிறுத்திவிட்டு கொள்ளையர்கள் தப்பிச்
சென்றுள்ளனர். காரில் இருந்து 15 லட்ச ரூபாய் திருட‌ப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் ஓட்டுநர் நாராயணன் மற்றும் பாதுகாவலர் சுரேந்திரனிடம் விசாரணை நடத்திவரும் போலீஸார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகி‌ன்றனர். இதனிடையே, தடயவியல் நிபுணர்கள் காரில் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close