[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி
  • BREAKING-NEWS இடஒதுக்கீடு விவரங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடரில் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டத்தை உருவாக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை

பள்ளியிலும் தொடரும் சாதிய கொடுமை?: மாணவனை பிளேடால் கீறிய சக மாணவர் !

student-attacked-his-classmate-with-blade-due-to-caste-conflict

பட்டியலின மாணவனை பிளேடால் கீறிய சக மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் பாலமேடு மறவப்பட்டி காலனியை சேர்ந்தவர்  ராமு - ராசாத்தி தம்பதியினர். இவர்களது மகனான சரவணகுமார் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பள்ளி முடியும்போது சரவணகுமாரின் சக நண்பரான மோகன்ராஜின் புத்தகப்பையை இவர்களுடன் படிக்கும் மாற்று சாதி வகுப்பை சேர்ந்த மாணவன் மகா ஈஸ்வரன் மறைத்து வைத்துக் கொண்டு தேட வைத்துள்ளார்.

பின்னர் சரவணகுமார் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரும் நீண்ட நேரமாக தேடியதில் புத்தகப்பை பள்ளிக்கு அருகே இருந்த முட்புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்து. அதனை எடுத்துவந்த சரவணகுமார் மற்றும் மோகன்ராஜ், ஆத்திரத்தில் மகா ஈஸ்வரனிடம் தட்டிகேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மகா ஈஸ்வரன் பட்டியலின மாணவன் சரவணகுமாரை ஜாதியின் பெயரை கூறியபடி தனது கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் முதுகில் கீறியுள்ளார். 

இதில் பலத்த காயமடைந்த சரவணகுமாரை, சக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து மாணவன் சரவணகுமாருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பிளேடால் சக மாணவனை தாக்கிய மகா ஈஸ்வரன் மீது எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லாமல் மாணவன் தரையில் படுத்தபடி சிகிச்சை பெறுவது மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. மாணவனுக்கு வரும் 20-ம் தேதி காதணி விழா நடைபெற உள்ள நிலையில் மாணவனுக்கு நேர்ந்த இந்த சம்பவம் அவரது பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஜானிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது பள்ளி வளாகத்திற்கு வெளியே நடைபெற்ற பிரச்னை எனவும் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close