[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

காவல் நிலையத்தில் குறவர் இன குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் சித்திரவதை

three-kurava-families-allegedly-brutally-tortured-by-kanyakumari-police

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் குறவ இனத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகளை கன்னியாகுமரி போலீசார் சித்திரவதை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

மதுரை மாவட்டத்திலிருந்து 3 குறவ இன குடும்பத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன் பிழைப்பு தேடி கன்னியாகுமரி சென்றுள்ளனர். ஆனால் அவர்களை கடந்த ஏப்ரல்மாதம் 29-ம் தேதி கைது செய்த கன்னியாகுமரி போலீசார் தக்கலை போலீஸ் நிலையத்தில் அடைத்துள்ளனர். 5 குழந்தைகள், 4 பெண்கள் உள்பட மொத்தம் 14 பேர்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறையில் கடந்த 2 மாதமாக அக்குடும்பத்தில் உள்ள பெண்களை போலீசார் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் , மேலும் செய்யாத குற்றத்தை செய்யததாக ஒப்புக்கொள்ளக் கூறியும் அவர்களுக்கு போலீசார்அழுத்தம் கொடுத்து வருவதாக தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஹென்ரி டிபாக்னே என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே போலீஸ் சித்திரவதையால் கால்கள் உடைந்த செல்வராஜ் என்பவருக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடும், மற்றவர்களுக்கு ரூபாய் 2 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும்என தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார். எனினும் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் போலீசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close