[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

மனைவியை வசியப்படுத்தி திருடிட்டாங்க - வழக்கறிஞரின் பரபரப்பு புகார்!

man-accuses-neighbours-of-theft-complain-lodged

தனது ‌மனைவியை வசியம் செய்து 150 சவரன் நகைகளை திருடிச் சென்றுவிட்டதாக சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் காவல்துறையினரிடம் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி. இவர் தனது வீட்டில் 150 சவரன் நகை, 2 கிலோ வெள்ளிப்பொருள்கள் மற்றும் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடு போய்விட்டதாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

தனது வீட்டுக்கு அருகே வசிக்கும் முதிய தம்பதி மீது சந்தேகம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். அந்த முதிய தம்பதி தனது மனைவி ஜோதியை வசியம் செய்து நகை, பணத்தை திருடிச்சென்றிருக்கலாம் எனக்கூறி போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளார் சத்தியமூர்த்தி

வழக்கறிஞரின் புகாரை அடுத்து காவல்துறையினர் நிகழ்விடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை, பீரோவும் அ‌‌ப்படியே இருந்தது. ஆனால் நகை உள்ளிட்ட பொருள்கள் மட்டும் காணாமல் போய்‌விட்டன. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் சத்தியமூர்த்தியின் மனைவி ஜோதியிடம் விசாரணை நடத்தினர். அவர் சரிவர பதில் அளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. வீட்டிற்குள் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் இருக்கின்றன. எனவே அதை மீறி வெளி ஆட்கள் வீட்டிற்குள் வந்து எதையும் உடைக்காமல் பொருள்களை திருடிச்சென்றிருக்க வாய்ப்பில்லை என கருதும் காவல்துறையினர், இதுகுறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close