[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

மிளகாய் பொடித்தூவி நூதன முறையில் திருட்டு !

theft-is-in-mode-of-spreading-chilli-powder-in-madurai

மதுரையில், பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து மிளகாய்பொடித் தூவி 30லட்சத்திற்கும் அதிகமான நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மதுரை அனுப்பானடி அடுத்த சின்னகண்மாய் பகுதியில் தொழிலதிபர் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். அவர்  மனைவி கிரகலட்சுமி மற்றும் மருமகள்  வீட்டில் இருந்துள்ளனர். அப்போது கூரியர் வந்திருப்பதாகக் கூறி வீட்டில் இருந்தவர்களை சிலர் அழைத்துள்ளனர். அதனை நம்பி கிரகலட்சுமி வீட்டின் வாசலுக்குச் சென்றுள்ளார். அப்போது தலைகவசம் அணிந்திருந்த இரண்டு பேர் அவரை கீழே தள்ளிவிட்டு மிளகாய்ப் பொடியைத் தூவி உள்ளனர். சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த வெற்றிவேலும், அவரது மருமகளும் வெளியே வந்துள்ளனர். 

அப்போது அவர்கள் முகத்திலும் மிளகாய் பொடியை வீசிய கொள்ளையர்கள், வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த 32 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்தனர். மேலும், மூவரும் அணிந்திருந்த 46 சவரன் தங்க நகைகளையும் அவர்கள் பறித்துச் சென்றனர். வெற்றிவேலின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா சில நாட்களுக்கு முன்பு பழுதாகியுள்ளது. இதை அறிந்தவர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என காவல் துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close