[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது - கே.எஸ்.அழகிரி
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே; மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யபப்டுவதும் இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்

வரதட்சணை  கேட்டு மனைவியை வீட்டுக்குள் சிறை வைத்த கணவன்

man-locks-up-wife-for-weeks-brands-son-for-dowry-in-chengalpattu

வரதட்சணை  கேட்டு வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்ட பெண்ணையும், அவரது இரு குழந்தைகளையும் போலீசார் மீட்டனர்

தூத்துக்குடி அருகேயுள்ள சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி. இவர் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து, கணவரின் குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கார்த்திகேயன் ஐடி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பரமேஸ்வரியை அவரது கணவரின் குடும்பத்தினர் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. 

கார்த்திகேயனும் அவரது பெற்றோரும் பரமேஸ்வரியை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்தும் கொடுமை செய்துள்ளனர். ஆனால் இது குறித்து பரமேஸ்வரி யாரிடமும் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் பிறந்தவீட்டில் இருந்து கூடுதல் வரதட்சணை  வாங்கிவர வேண்டுமென்றும், இல்லையென்றால் குழந்தைகளை கொலை செய்துவிடுவதாகவும் பரமேஸ்வரியை மிரட்டியுள்ளனர். இது குறித்து பரமேஸ்வரி தனது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்கவே, அதிர்ந்து போன பரமேஸ்வரியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

புகாரை ஏற்ற செங்கல்பட்டு போலீசார் உடனடியாக பரமேஸ்வரியையும் அவரது குழந்தைகளையும் மீட்டனர். வரதட்சணை  புகாரின் அடிப்படையில் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான கார்த்திகேயனின் பெற்றோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close