[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு? - மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS தோனியிடம் தேர்வுக்குழு பேச வேண்டும்: ஓய்வு விவகாரம் பற்றி சேவாக்!
  • BREAKING-NEWS கடத்தப்பட்ட குழந்தை '10 மணி' நேரத்தில் மீட்பு - வீட்டு பணிப்பெண் காதலனுடன் கைது
  • BREAKING-NEWS டி.என்.பி.எல். தொடர் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS விடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா

பெற்ற தாயே குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை ! 

a-mother-gave-poison-to-her-child-and-kill-for-illegal-relation-in-saravanampatti-near-coimbatore

கோவை சரவணம்பட்டி அருகே 3 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு, பிரேதமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், திடீர் திருப்பமாக குழந்தையை பெற்ற தாயே விஷம் கொடுத்து கொலை செய்தது காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கோவை காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும் ரூபினி தம்பதியினர். இவர்களுக்கு 3 வயதில் தேவிஸ்ரீ என்ற மகளும் உள்ளார். இந்த 3 வயது சிறுமி நேற்று காலை சரவணம்பட்டி கரட்டுமேடு அருகே உள்ள முட்புதரில் உடலில் காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அப்போது சிறுமியின் தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் இருந்துள்ளதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியின் பெற்றோர் பால்ராஜ்-ரூபினி தம்பதியினர் எனக் கண்டுப்பிடித்தனர். அப்போது தாய் ரூபிணி தமிழ்ச்செல்வன் என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்தது தெரிவந்துள்ளது. மேலும் ரூபிணி கணவரை பிரிந்து தமிழ்செல்வனுடன் சரவணம்பட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் கள்ளக்காதலுக்கு இடையூறாக தனது குழந்தை இருப்பதாக கருதிய ரூபிணி, தனது குழந்தையை விஷம் கலந்த பிஸ்கட் கொடுத்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இறந்த குழந்தையை தமிழ்செல்வனிடம் சொல்லி மறைக்க சொல்லியுள்ளார் ரூபிணி, இதனால் இறந்த பிரேதத்தை முட்புதரில் தமிழ்செல்வன் வீசி சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவதை அறிந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.   

மேலும் குழந்தை தேவிஸ்ரீ தலையில் காயம் இருப்பதால் உடற்கூராய்வு முடிவில் மேலும் பல உண்மைகள் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே சிறுமியின் தாய் ரூபிணியை கைது செய்த போலீசார்,தலைமறைவாக இருக்கும் கள்ளக்காதலன் தமிழ்ச்செல்வனை பிடிக்க தீவிரம் காட்டியுள்ளனர். அதற்காக மாநகர காவல் ஆணையாளர் சுமித்திரன் மற்றும் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் 3 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக இருக்கும் தமிழ்செல்வனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close