[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு
  • BREAKING-NEWS மருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்
  • BREAKING-NEWS அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்
  • BREAKING-NEWS பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் டெல்லியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்திப்பு

குடித்துவிட்டு தொல்லை தந்த கணவரை கொலை செய்த மனைவி..!

the-wife-killed-her-husband-and-son-in-vellore

வேலூரில் தினமும் குடித்துவிட்டு தொல்லை தந்ததால் தனது கணவரையும், ஒரு வயது ஆண் குழந்தையையும் கொன்று புதைத்துவிட்டு, காணாமல்போனதாக நா‌டகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். 

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புறா பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா-தீபிகா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு வயதில் பிரனீஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 13-ம் தேதியில் இருந்து தீபிகாவின் கணவர் ராஜா மற்றும் குழந்தை பிரனீஷ் ஆகிய இருவர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் இருவரும் காணாமல் போனது குறித்து ராஜாவின் உறவினர்கள் தீபிகாவை கேட்ட போது, ராஜாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் அவர்கள் தனது குழந்தையை எடுத்துக்கொண்டு வேறு ஒரு பெண்ணுடன் சென்றுவிட்டதாக கூறியுள்ளார். 

இந்நிலையில் தீபிகாவின் பதிலால் சந்தேகம் அடைந்த ராஜாவின் அக்கா லட்சுமி அவர்கள் இருவரும் காணாமல் போனது தொடர்பாக ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் தீபிகாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணை தான் தனது கணவரையும் குழந்தையையும் கொலை செய்து ஆற்காடு அடுத்த சாத்தூர் ஏரி அருகே புதைத்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும் கொலைக்கான காரணம் குறித்து கேட்டதற்கு தனது கணவர் ராஜா குடித்துவிட்டு வந்து தொல்லை செய்ததால் கொலை செய்தேன் என்றும் கொலை காரியின் குழந்தை என தனது குழந்தைக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்க்காக தனது குழந்தையையும் கொலை செய்தேன் என தீபிகா அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளா‌ர்.

இதனைதொடர்ந்து ராணிப்பேட்டை டி.எஸ்.பி கலைசெல்வன்,ஆற்காடு வட்டாட்சியர் வச்சலா மற்றும் வேலூர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ குழுவினர் புதைக்கப்பட்ட இரண்டு சடங்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் ராஜாவின் உறவினர்கள் கூறுகையில்,தீபிகா இதை தனியாக செய்திருக்க முடியாது. தீபிகாவிற்க்கு தவறான உறவு இருந்துள்ளதால், வேறொருவருடன் கூட்டு சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என குற்றம் சாட்டுகின்றனர். 

இதனால் காவல்துறையினர் தீபிகாவை கைது செய்து தொடர் விசாரணை மேற்க்கொண்டனர், அப்போது இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற‌ கோணத்தில் விசாரித்ததில் தீபிகாவே இருவரையும் கொலை செய்தவர் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. மனைவியே தனது கணவர் மற்றும் குழந்தையை கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close