[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

மாமனாரை தீயிட்டு கொளுத்திய மருமகள் கைது..!

daughter-in-law-arrested-for-father-in-law-has-burned-who-had-married-her-husband-for-another-woman-in-thiruttani

திருத்தணி அருகே கணவரை வேறு ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த மாமனாரை, உயிரோடு தீயிட்டுக் கொளுத்திய மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த நெமிலி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சபாபதி. இவர் நேற்று காலை அவரது வீட்டின் முன்பு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சபாபதியை மீட்டனர். மேலும் பலத்த தீக்காயத்துடன் சபாபதியை மீட்டு அவர்கள், சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் இறந்து விட்டார்.

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சபாபதியிடம் நீதிபதி ரோஸ்லின்துரை வாக்குமூலம் பெற்றார். அப்போது,“எனது மகன் பிரபாகரனுக்கும் சென்னை மாதவரம் சேர்ந்த காயத்ரி என்பவருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பரத் என்ற ஒரு மகனும் உள்ளார். இந்த சூழலில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் காயத்ரி எனது மகனை விட்டு பிரிந்து தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார். என் மகனுடன் காயத்திரி குடும்பம் நடத்த வராததால், சென்னை சேர்ந்த வேறு ஒரு பெண்னுடன் கடந்த மாதம், 11ம் தேதி இரண்டாவது திருமணம் செய்து வைத்தேன். அவர் பெயரும் காயத்ரி.

இதனால் ஆத்திரமடைந்த என் மகனின் முதல் மனைவியும், அவரது தாய் கலைவாணி ஆகிய இருவரும் என் வீட்டின் முன்பு கட்டிலில் துாங்கிக் கொண்டிருந்த போது என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பிச் சென்றனர்” என்று வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து காயத்ரி மற்றும் கலைவாணி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close