[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் நிரூபணம்

post-mortem-reveals-6-year-old-gir-s-murder-in-kovai

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது

கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் பகுதியை சேர்ந்த ஒருவர், தனது  6 வயது மகளை காணவில்லை என காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கஸ்தூரி நாயக்கன் புதூர் என்கிற இடத்தில் கத்தியால் அறுபட்டு காயங்களோடு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பள்ளத்தில் பிணமாக கிடந்த சிறுமியை மீட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த கண்டெடுக்கப்பட்ட உடல் காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமி என கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்நிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியானது. அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து  முதல் தகவல் அறிக்கையில் கொலை பிரிவுடன், போக்சோ பிரிவும் சேர்க்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  

கொலை குறித்து விசாரிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தனித்தனியாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.  சந்தேகத்தின் பேரில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் விஜயகுமார் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close