[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் !

police-have-arrested-a-75-year-old-woman-for-trying-to-rape-a-young-women-at-manapparai

மணப்பாறை அருகே மாற்றுதிறனாளியான 25 வயது இளம்பெண்ணை 75 வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது இளைய மகள் (25) மனவளர்ச்சிக்குன்றியும், வாய் பேச முடியாத மாற்றுதிறனாளியாக இருந்து வருகிறார். பொற்றோர் வேலை நிமித்தமாக வெளியில் சென்றிருந்த நிலையில் அந்த மனவளர்ச்சிக் குன்றிய இளம்பெண் வழக்கம் போல் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த உறவினர் அந்த பெண் வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது அங்கு கதவு தாழிட்டு இருந்தது. பின்னர் அந்த வீட்டின் உள்ளே அதே பகுதியை சேர்ந்த 74 வயதுடைய பொம்முரெட்டி என்பவர் இருந்தை பார்த்ததாக கூறுகின்றனர். 

Image result for women abuse

மேலும் வேறுசிலரை அழைத்து வர ஒருவர் சென்ற நிலையில், பொம்முரெட்டி அங்கிருந்து ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பெண்ணியின் பெற்றோர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.பின்னர், நிகழ்விடத்துக்கு வந்த அந்த பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வையம்பட்டி போலீசார் பொம்முரெட்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இதனைதொடர்ந்து பாதிக்கப்பட்ட இளம்பெண் மருத்துவ சிகிச்சைக்காக மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்ட பொம்முரெட்டியை போலீசார் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close