[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

பாலியல் வன்கொடுமை : 5 பேர் கைது 

five-has-been-arrested-in-sexual-assault-and-murder-of-school-girl-at-tiruvallur

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 5 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கொத்த புதுவெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரின் மகள் கீச்சலம் அரசு உயர் நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த சூழலில் கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற அவர் மாயமானார். மாணவி மாயமானது குறித்து புகார் பதிவு செய்த பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரணை கிடப்பில் போட்டனர்.

Image result for பாலியல் வன்கொடுமை

5 மாதங்கள் ஆன நிலையில் கடந்த 10 ஆம் தேதி கீச்சலம் கிராமத்திற்கு அருகில் ஓடையில் எலும்புக்கூடு, பள்ளி  சீறுடை, செருப்பு ஆகியவை இருப்பது  போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அங்கு எலும்பு கூடாக கிடந்தது மாயமான பள்ளி மாணவி தான் என்று உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வழக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி நேரடியாக கையில் எடுத்து 4 தனிப்படை அமைத்து விசாரணை தீவிரப்படுத்தினார். அவர்களது விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெங்கடாபுரத்தைச் சேர்ந்த அந்த மாணவியின் உறவினர் சங்கரய்யா(21) என்ற இளைஞர் மாணவியை சம்பவத்தன்று கடத்திச் சென்று அதே பகுதியில் உள்ள நாதமுனி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள பன்னை வீட்டில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை பார்த்த பன்னை வீட்டு உரிமையாளர் நாதமுனியுடம் ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளார். மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவினர்கள் ஜகதீஸ் (46) அவரது அண்ணன் கிருஷ்ணமூத்தி(51), மோகன் ராஜூ(45) ஆகியோரை அழைத்து வந்து தொடர்ந்து ஐந்து நாட்கள் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை அடுத்து மாணவியை தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்து விட்டு பன்னை வீட்டிற்கு அருகில் உள்ள மாந்தோப்பில் புதைத்து விட்டனர். 

Image result for பாலியல் வன்கொடுமை

இதனைதொடர்ந்து மாணவியை கொலை செய்து உடலை புதைத்ததில் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்று நினைத்து ஐந்து பேரும் மீண்டும் ஒன்று கூடி இரண்டு மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் புதைக்கப்பட்ட மாணவி உடல் தோண்டி எடுத்துச் சென்று ஓடையில் புதைத்துள்ளனர். இதனைகேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் சங்கரய்யா வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து நாதமுனி, ஜெகதீஷ், கிருஷ்ணமூர்த்தி, மோகன்ராஜூ ஆகிய 4 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பரணிதரன் ஐந்து பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டதையடுத்து புழல் சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close