[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்குடியில் அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் திறந்த புகாரில், சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி மீது காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் மகன் அதிமுகவிற்காக பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்; அதனால் அவரை வேட்பாளராக அறிவித்ததில் எந்த தவறும் இல்லை - அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

துணை நடிகை தற்கொலை வழக்கில் காதலனுக்கு சிறை 

a-lover-has-been-arrested-in-sub-actress-yashika-suicide-at-chennai

சென்னை பெரவள்ளூரில் சினிமா துணை நடிகை தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரின் காதலனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பூரை சேர்ந்தவர் மேரிஷீலா மரியா ராணி என்ற யாசிகா. 21 வயதாகும் இவர் பல சின்னத்திரை தொடர்களிலும் மன்னர் வகையறா படத்தில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். யாசிகா சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்து கோயம்பேட்டில் வேலை பார்த்து வந்தாக தெரிகிறது. அப்போது பச்சையப்பன் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து கொண்டே செல்போன் கடையில் வேலை செய்து வந்த பெரம்பூரை சேர்ந்த அரவிந்த் என்பவருடன் காதல் வயப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அரவிந்த் தன்னுடைய தந்தை மற்றும் அண்ணன் உதவியுடன் வீடு வாடகைக்கு எடுத்து யாசிகாவுடன் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த 13 ஆம் தேதி வீட்டில் தூக்கில் தொங்கியவாறு யாசிகாவின் உடல் மீட்கப்பட்டது. இதனைதொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

யாசிகா தற்கொலை செய்த வீட்டில் போலீசார் ஆய்வு செய்தபோது யாசிகா தனது கைப்பட காதலன் அரவிந்திற்கு எழுதிய டைரி சிக்கியது. அதில் "உனக்கு என்மேல் பாசம், அக்கறை இல்லை. அப்புறம் ஏன் என்ன லவ் பண்ணின? நான் எல்லாத்தையும் விட்டுவிட்டு உனக்காக வந்தேன். உன்னை விட்டு என்னால் இருக்க முடியவில்லை. நீ என்ன ஏமாத்துறது தெரியாம உன்னை இன்னும் அதிகமா லவ் பண்ண ஆரம்பிச்சேன். நமக்கு திருமணம் மட்டும்தான் ஆகவில்லை. எனக்கு உன் கூட வாழனும்னு ஆசையா இருக்கு. நான் சாப்பிட்டு மூன்று நாள் ஆகுது. நான் வாழ்ந்தாலும் செத்தாலும் உனக்காக மட்டும் தான். என்னை அனாதையாக விட்டுட்டு போய்ட்ட. என் காதலை நிரூபிக்க சாகுறத தவிர வேற வழி தெரியல" என எழுதியிருந்தார்.

Image result for arrested

இதனைதொடர்ந்து யாசிகாவின் தற்கொலைக்கு காரணமான அவருடைய காதலரான அரவிந்தை போலீசார் கைது செய்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குபதிவு செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close