[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

மகள் மீதே  பாலியல் வன்கொடுமை ! கர்ப்பமாக்கிய தந்தை

man-arrested-for-raping-daughter-in-kovai

கோவை வெள்ளிமேடு பகுதியில் 7 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கோவை பூலுவம்பட்டி அருகே உள்ள வெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவருக்கு வயது 35. இவரது மனைவி தனியார் பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

Image result for சிறுமி பாலியல் வன்கொமை

இந்நிலையில் அந்த மாணவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சைக்காக தனது மகளை அரசு மருத்துவமனை அழைத்து வந்துள்ளனர். அப்போது ஸ்கேன் செய்து பார்த்ததில் மகள் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதனை அறிந்த தாய் அதிர்ச்சி அடைந்தார். பின் மகளிடம் இது பற்றி கேட்ட போது, தந்தை தான் இதற்கு காரணம் என தெரிவித்து உள்ளார். 

Image result for மகள் கர்ப்பமாக்கிய தந்தை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த மகளிடம் அவரது தந்தை ராமலிங்கம் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது மனைவி வேலைக்கு சென்று விட்டதாக கூறிகின்றனர். இது தான் அந்த மாணவியின் கர்ப்பமாகியதற்கு காரணமாக கூறப்படுகிறது.

Image result for மகள் கர்ப்பமாக்கிய தந்தை

இதனையடுத்து மருத்துவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், ராமலிங்கம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பேரூர் போலீசார் தீவர விசாரணை நடத்தி வருகின்றனர். 7 ஆம் வகுப்பு மாணவியை அவரது தந்தையே கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பேரூர்  காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஏற்கனெவே இது போலவே பல சம்பவம் நடந்துள்ளதாக பொது மக்கள் கூறுகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close