[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

“நான் பாங்காக் போலீஸ் அதிகாரி” - அன்பாக பேசி 5 பவுனை திருடிய ஆசாமி 

police-has-arrested-a-person-who-stole-jewelery-and-money-in-chennai

சென்னையில் பாங்காக் போலீஸ் எனக் கூறி பலரிடம் நகை, பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூர் கபாலி காலனியைச் சேர்ந்தவர் கோபி. இவரது தாய் வரலட்சுமி. மயிலாப்பூர் சாய்பாபா கோயிலுக்கு வெளியில் பூக்கடை வைத்துள்ளார். கோபி ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். கோபி கடந்த மாதம் 9ம் தேதியன்று சென்னை பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். 

அதில், ‘‘6-ம் தேதி எனது தாயாரின் பூக்கடையில் நான் இருந்தேன். அப்போது அங்கு வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தன்னை கார்த்திக் என அறிமுகம் செய்து கொண்டார். பாங்காக்கில் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருவதாக கூறிய அவர், தனது வீடு அடையாறு பகுதியில் விஐபிக்கள் பகுதியான போட் கிளப் ரோட்டில் உள்ளதாக கூறினார். சாய்பாபா கோயிலில் அன்னதானம் செய்வதற்காக வந்ததாக தெரிவித்த அவர், தொடர்ந்து 4 நாட்கள் எனது தாய் வரலட்சுமியின் பூக்கடைக்கு வந்து குடும்ப நண்பர் போல பழகினார். எனக்கும் பாங்காக்கில் வேலை வாங்கித் தருவதாக கூறி நம்ப வைத்தார். 

Image result for theft

இந்நிலையில் 9-ம் தேதி என்னை பார்க்க பூக்கடைக்கு வந்த அவர், அன்னதானம் பொருள்கள் வாங்க மொத்தவிலை மளிகைக்கடைக்கு போக வேண்டும் என்று கூறினார். அதன் பேரில் அவரை என்னுடைய பைக்கில் அழைத்துச் சென்றேன். அப்போது அவர் மளிகை பொருள்கள் அப்புறம் வாங்கிக் கொள்ளலாம். என் மனைவி திநகர் சரவணா ஸ்டோர்சில் துணி வாங்கிக் கொண்டிருக்கிறார். அவசரமாக அங்கே போகவேண்டும் என்று கூறினார். அதனால் இருவரும் பாண்டிபஜார் சென்றோம். 

திநகர் வெங்கட் நாராயணா ரோட்டில் உள்ள உட்லண்ஸ் ஓட்டலில் ஜுஸ் குடித்த போது நான் கழுத்தில் அணிந்திருந்த செயினை பார்த்து, “செயின் அழகாக உள்ளது கழற்றுங்கள், நான் போட்டு பார்க்கிறேன், இதேபோல் வாங்க வேண்டும்” எனக் கூறி நகையை வாங்கிப்போட்டுக் கொண்டார். பிறகு இருவரும் உஸ்மான் சாலையிலுள்ள சரவணா ஸ்டோர் வாசலுக்கு வந்தோம். ‘‘வண்டியை நிறுத்தி விட்டு வாருங்கள். நான் உள்ளே காத்திருக்கிறேன்” என்று கூறினார். பைக்கை நிறுத்தி விட்டு பார்த்தபோது 5 சவரன் தங்க நகையுடன் அவர் ஓடி விட்டார் என்று அந்தப் புகாரில் கூறியிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணாஸ்டோர்ஸ் வாசலில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து ஆய்வு செய்தனர். அதில் மோசடி நபரின் உருவம் பதிவாகி இருந்தது. மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில் அவரது உண்மையான பெயரே கார்த்திக் என்பதும் சேலம், மேட்டூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு பாண்டிபஜார் போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையில் இது போன்ற நூதன முறையில் மோசடி செய்து சுமார் 10க்கும் மேற்பட்ட நபர்களிடம் நகையை கொள்ளையடித்தது தெரிய வந்தது. மேலும் கார்த்திக்கிடமிருந்து 25 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் சென்னையின் பல்வேறு இடங்களில் குறிப்பிட்ட சமூகத்தினரையும், கோயில்களுக்கு அருகில் கடை வைத்திருப்பவர்களையும், குறி வைத்து நாடகமாடி நகை திருடியுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் தன்னை பெரிய பணக்காரன் என்றும், வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்றும், தொழிலதிபர், பொறியாளர், ஆடிட்டர் என்றும் பலரை நம்ப வைத்து இவர் திருடியுள்ளார். கார்த்திக் மீது சென்னையில் மட்டும் 10 க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close