[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.25 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.37 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்
  • BREAKING-NEWS நீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்

பைக் ரேசர் உடையில் போரூர் ஏடிஎம் பணத்தைக் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல்  

atm-robbery-in-porur

சென்னை போரூர் காவல்நிலையம் அருகே ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்தவர்களை கத்தியால் வெட்டிவிட்டு கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் ஏஜென்சி நிறுவனம் மூலம் வடபழனியில் வங்கிகளுக்கு பணம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ரூ.35 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு தேவராஜ், முரளி ஆகியோர் வடபழனி, விருகம்பாக்கம், வளசரவாக்கம், கட்டுப்பாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கி ஏடிஎம்களில் பணத்தை நிரப்பி கொண்டு வந்தனர். 

Image result for atm robbery

இறுதியாக ரூ.14 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு போரூர் அடுத்த அய்யந்தாங்கல் பகுதியில் உள்ள ஏடிஎம்மில் பணத்தை இருவரும் நிரப்பி கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் முகத்தில் ஹெல்மெட், கை உறை போன்றவற்றை மாட்டிக்கொண்டு பணம் எடுப்பது போல் நின்று திடீரென ஏடிஎம்மில் சென்று பணத்தை தரும்படி கேட்டுள்ளார். பணம் தர மறுக்கவே தேவராஜ் கையை கத்தியால் வெட்டி விட்டு ரூ.10 லட்சம் பணம் இருந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே இருச்சக்கர வாகனத்தில் கூட்டாளியுடன் தப்பிச் சென்று விட்டனர்.

Image result for atm robbery

இச்சம்பவம் குறித்து போருர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போருர் காவல்துறையினர் வந்த பின்னர் மதுரவாயல் காவல் எல்லையில் நிகழ்ந்திருப்பதாக கூறி மதுரவாயல் காவல் துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதனால் விசாரணை துவங்க சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் தாமதமானது. இதனைத்தொடர்ந்து மதுரவாயல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் ஏடிஎம் அருகே உள்ள கடை உரிமையாளர்கள் கூறுகையில் கொள்ளை அடித்த நபர்கள் ஆங்கில திரைப்படத்தில் வருவது போல் ஹெல்மெட் மற்றும் பைக் ரேசர் போன்று உடை அணிந்து இருந்ததோடு அதில் வருவது போன்றே ஆயுதத்தையும் வைத்து இருந்தனர். பணம் நிரப்பும் வாகனம் வரும் என்பதை அறிந்து இருந்ததால் வாகனம் வரும் வரை காத்திருந்து அருகே உள்ள கடையில் 200 ரூபாய்க்கு கொடுத்து குளிர்பானம் வாங்கி பருகிய சமையத்தில் வாகனம் வரவே மீதித் தொகையையும் வாங்காமல் சென்றுள்ளனர். 

Related image

அதேபோல் பணம் நிரப்பும் வாகனத்துடன் துப்பாக்கி ஏந்திய காவலர் வராததை தெரிந்து கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் இந்தக் கொள்ளை நிகழ்த்தி சென்றதாக தெரிவித்தனர். ஆட்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்தவர்களை கத்தியால் குத்தி விட்டு பனத்தை எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close