[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
  • BREAKING-NEWS மதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்

திருட வந்ததாக அடித்துக் கொலை - தற்கொலையாக மாற்ற முயன்ற மக்கள்

a-village-people-has-kill-a-man-to-steal-in-vellore

மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் குழந்தை கடத்துவதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரவி வந்தது. நாடு முழுக்க இந்த வதந்தியால் 24 பேர் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வுகள் அரங்கேறின. குழந்தை ஒன்று சாக்லேட் கேட்டதால் அன்போடு கொடுத்த ருக்மணி என்ற பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியது. 

மிக நீண்ட விழிப்புணர்வுக்கு பின் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தன. ஆனால் அவ்வப்போது வடமாநில இளைஞர்கள் மற்றும் தொழிலாளிகளை தாக்கும் சம்பவம் தமிழகத்தில் நடந்தே வருகிறது. இந்நிலையில் நேற்று வேலூரில் திருட வந்ததாக கூறி வடமாநிலத்தை சேர்ந்த ஒருவரை அடித்துக் கொன்ற சம்பவம் வேலூரில் நடந்துள்ளது. 

கே.வி.குப்பம் அடுத்த கோசவன் புதூர் பகுதியில் உள்ள கலாநாதன் நாயுடு என்பரின் வீட்டு கதவை நேற்று நள்ளிரவு சந்தேகத்திர்கிடமாக வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த 3 பேரை தட்டியுள்ளனர். சந்தேகம் அடைந்த கலாநாதன் போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்களை பார்த்ததும் 3 பேரும் ஓட ஆரம்பித்துள்ளனர். இவர்களை விரட்டி பிடிக்கும் போது குஜனன் கர்பாலியா(36) என்வரை பிடித்து திருட வந்ததாக கூறி மரத்தில் கட்டிப்போட்டு பொது மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். 

பொதுமக்கள் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே குஜனன் கர்பாலியா உயிரிழந்துள்ளார். எப்படியும் காவல்துறை விசாரணை நடந்தால் மாட்டிக் கொள்வோம் என உணர்ந்த மக்கள் , இதனை மறைக்க நினைத்தனர். இதையடுத்து சம்பவம் வெளியில் தெரியாமல் இருக்க உடலை அருகில் உள்ள கிணற்றில் வீசியுள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த கே.வி.குப்பம் காவல் துறையினர் கிணற்றில் இருந்து சடத்தை மீட்டு விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : தற்கொலைகொலைMurderVelloreKillSuicide
Advertisement:
Advertisement:
[X] Close