[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

மதுரை அருகே தந்தையை மிதித்து கொன்ற மகன்... தீவிரமாக தேடும் காவல்துறை..!

son-killed-father-during-drunken-time-in-usilampatti

உசிலம்பட்டி அருகே குடும்பத் தகராறில் தந்தையை மிதித்து கொன்று தப்பியோடிய மகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
    
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி- மலர்கொடி தம்பதியினர். கூலி தொழிலாளியான இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இரு மகன்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இளைய மகன் தமிழ்பாண்டி, வீடு மற்றும் தோட்டத்தில் தனது சொத்தை பிரித்து தருமாறு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

Image result for son kill father

இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வந்த தமிழ்பாண்டி தந்தை கருத்தப்பாண்டியிடம் சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்துள்ளார். அப்போது தந்தையை கீழே தள்ளி நெஞ்சில் ஏறி மிதித்ததில் கருத்தப்பாண்டிக்கு மூச்சுத்தினறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். பின்னர் கருத்தப்பாண்டியை உறவினர்கள் எழுமலை ஆரம்ப சுகாதரா நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட கருத்தப்பாண்டியை மேல் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Image result for தந்தையையே மகன் அடித்துக்கொன்ற சம்பவம்

உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற கருத்தப்பாண்டியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டார் எனவும் நெஞ்சில் மிதித்ததில் எலும்புகள் உடைந்து நுரையீரலில் குத்தி இறந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர். மேலும் உடற்கூறு பரிசோதனைக்காக கருத்தப்பாண்டியின் உடல் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஏ.இராமநாதபுரம் போலீசார் தப்பி ஓடிய மகன் தமிழ்பாண்டியை தேடி வருகின்றனர். மேலும் தந்தையையே மகன் மிதித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close