[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

நெல்லை அருகே பழிக்கு பழியாக இரட்டை கொலை..?

two-people-involved-in-various-cases-have-been-murdered-by-the-mysterious-mob-in-nellai

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இரண்டு பேர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள வீரவநல்லூரைச் சேர்ந்தவர் சுடலைமணி. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவர் மீதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கான்சாபுரத்தில் உள்ள சுடலைமணியின் பாட்டி வீட்டிற்கு நேற்று இரவு இரண்டு பேரும் வந்துள்ளனர். அப்போது இருவரும் வீட்டிற்கு வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்த போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் இருவருவரையும் சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே சுடலைமணி ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். மேலும் கணேசன் தப்பித்து ஓட முயற்சிகையில் வயல்வெளி பகுதியில் சுற்றி வளைத்து மீண்டும் அதே கும்பலால் வெட்டியதில் அவரும் உயிரிழந்தார்.

Image result for வெட்டி படுகொலை

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த மாவட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பேரின் உடலையும் கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஏற்கெனவே வீரவநல்லூர் அருகே உள்ள கிளாக்குளத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கும் சுடலைமணியின் அண்ணன் மனைவிக்கும் தவறான உறவு இருந்ததால், கடந்த 2017-ம் ஆண்டு செல்வம் மேலப்பாளையம் பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் இவர்கள் இருவர் மீதும் கொலை செய்யப்பட்டதற்கான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தகொலை சம்பவத்திற்கு பழிக்கு பழியாக இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

Image result for வெட்டி படுகொலை

செல்வம் கொலை சம்பவம் தொடர்பாக நடந்துவரும் வழக்கு விசாரணையில் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராகவதற்காக இருவரும் பாட்டி வீட்டில் வந்து தங்கியதாக தெரிகிறது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இருவரையும் கொலை செய்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் தீவிர விவசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close