[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

பெண்ணிடம் நூதன முறையில் நகை திருடிய கும்பல் 

a-gold-has-been-theft-in-women-at-chennai

பெண்ணை ஆட்டோவில் அழைத்து சென்று கவனத்தை திசை திருப்பி நகையை திருடிச் சென்ற 3 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். 

சென்னை அயனாவரம் நாராயணன் தெருவைச் சேர்ந்தவர் பத்மாவதி (60). இவர் நேற்று இவர் புரசைவாக்கம் அபிராமி மெகா மால் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது 3 பெண்கள் அங்கு வந்து  பேருந்திற்காக காத்திருந்தனர். அப்போது அந்த 3 பெண்களும் "நான் அயனாவரம் செல்கிறோம். ஆட்டோவில் போகலாம் வாறீங்களா" என்று கேட்டனர். ஆனால் பத்மாவதி வரமாட்டேன் என்று கூறினார். பின் 3 பெண்களும் அவரை மயக்கி பேச்சு கொடுத்து ஆட்டோ ஒன்றில் அழைத்து சென்றுள்ளனர். 

Image result for chain theft

இந்நிலையில் ஆட்டோவில் செல்லும் போது நகையை இது போன்று வெளியே தெரியும்படியாக போடக்கூடாது என்று கூறி அவரது நகையை பேப்பரில் மடித்து கொடுத்துள்ளனர். பின் அயனாவரம் வந்ததும் பத்மாவதி அந்த ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றார். வீட்டிற்கு சென்றதும் பேப்பரை திறந்து பார்த்த போது அதில் இருந்த 5 சவரன் தங்க நகை மாயமாகி இருந்தது.

Image result for women chain robbery

அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக அயனாவரம் போலீசாரிடம் ஆட்டோவில் வந்த 3 பெண்கள் நகையை திருடிச் சென்றதாக புகார் கொடுத்தார். சம்பவம் நடந்த இடம் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதி என்பதால் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் மாற்றப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close