[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

காதலுக்காக தந்தையைக் கொலை செய்த மகன்

son-killed-his-father-for-love

திருவண்ணாமலையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையைக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை கீழ் ராவந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரராமன். இவரது மகன் விக்னேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதல் விவகாரம் குறித்து அறிந்த பெண்ணின் தந்தை, விக்னேஷின் தந்தை சுந்தரராமனை சந்தித்து காதல் விவகாரம் குறித்துக் கூறியுள்ளார். மேலும், மகன் விக்னேஷை கண்டித்து வைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த சுந்தரராமன் விக்னேஷின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் இனிமேல் அந்தப் பெண்ணை சந்திக்கவோ, பேசவோ, பழகவோ கூடாது என விக்னேஷை கண்டித்துள்ளார். இதனால் விக்னேஷ் மனமுடைந்து சோகத்தில் இருந்துள்ளார். இதையடுத்து தந்தையின் கண்டிப்பால் ஆத்திரமடைந்த விக்னேஷ் தந்தையின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார். 

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விக்னேஷை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close