[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட பெற்றோர் !

parents-commit-suicide-after-killing-her-childrens-in-chennai

சென்னையில் பெற்ற குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு தாய் மற்றும் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கண்ணகி நகர் அடுத்த எழில் நகரை சேர்ந்தவர் பாபு (30). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒன்னறை வருடங்களாக எழில் நகரில் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் பாபு விமலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் பாபு தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து விமலாவிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கமாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி விமலா திருக்கழுக்குன்றத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையெடுத்து நேற்று முன் தினம் பாபு அங்கு சென்று விமலாவை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று இரவிலிருந்து தாழ்ப்பாள் போடப்பட்ட வீடு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் போலீசார் வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பாபு மற்றும் விமலா தூக்கில் தொங்கியவாறு சடலமாக இருந்துள்ளனர். மேலும் இவர்களது குழந்தை கிஷோர்(6), தியா(4) இருவரும் கழுத்து நெறிக்கப்பட்டு படுக்கையில் சடலமாக இருந்தனர். இதனைதொடர்ந்து நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தைகள் இருவரையும் கொன்று விட்டு பாபுவும், விமலாவும் தற்கொலை செய்துகொண்டனரா? அல்லது மூவரையும் கொன்று விட்டு பாபு தற்கொலை செய்து கொண்டாரா என கண்ணகி நகர் போலீசார் தீவரமாக விசாரித்து வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close