[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

‘தீரன்’படப்பாணியில் மாடு திருடி வந்த வடமாநில கும்பல் கைது 

the-north-indian-gang-were-arrested-by-cattle-stolen-on-chennai

மாடுகளை திருடும் வட மாநில குப்பம்பளை பொதுமக்கள் விரட்டி பிடித்து அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புறநகர் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் மாடுகள் அடிக்கடி திருடுபோவது என்பது தொடர்கதையாகி உள்ளது. அந்த வகையில் கடந்த மூன்று மாதங்களில் பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை,திருமழிசை போன்ற பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட மாடுகள் திருடு போயுள்ளன. 

இது குறித்து மாடுகளை இழந்த மக்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இச்சூழலில் மாடு திருடும் நபர்களை பிடிக்க அந்தந்த கிராமத்து இளைஞர்கள் இரவு காவல் காத்து வந்தனர். அப்போது அவ்வழியாக மாடு திருடும் வட மாநில கும்பல் ஒன்று வேனில் அவ்வழியாக சென்றது. இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் அந்த வேனை துரத்தி சென்றனர். 

அப்போது அந்த வாகனம் நிற்காமல் இருசக்கர வாகனத்தின் மீது ஏற்றி சென்றது. அதிலிருந்த இரண்டு வாலிபர்கள் அதிஷ்டவசமாக உயிர்த் தப்பினர். இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அந்த வேனை சுற்றி வளைத்தனர். அப்போது அதிலிருந்த வட மாநிலத்தவர் பொதுமக்களை கத்தியால் வெட்ட முயற்சி செய்தனர்.

எனினும் உயிரை பணயம் வைத்து அதிலிருந்த ஒருவரை பிடித்தனர். வேனில் இருந்த மற்ற 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். பிடிப்பட்ட நபரை பொதுமக்கள் விசாரித்ததில் என்னை விட்டுவிடுங்கள் 5 லட்சம் பணம் தருகிறேன் என்றும் திருடிய மாடுகளை பெங்களூர் அருகே உள்ள கிராமத்தில் உள்ளதாகவும் அதனையும் திருப்பி தந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். மேலும்  ஒரு நாளைக்கு 10 மாடுகளை திருடி செல்வோம் என அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.  

இந்நிலையில் பிடிப்பட்ட நபரிடம் இருந்த ஓட்டுனர் உரிமத்தில் அவர் ஹரியானா மாநிலம், மேவத் பகுதியை சேர்ந்த டரிப் (29) என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவனை பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். படுகாயம் அடைந்த அவர் கே.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 

அந்த வட மாநிலத்தவர் வந்த வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே வாகனத்தில் இருந்து 2 அரிவாள்,கற்கள் மற்றும் விமானத்தில் சென்றதற்கான டிக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே ‘தீரன்’படப்பாணியில் பயங்கர ஆயுதங்களுடன் மாடு திருடும் இந்தக் கூட்டத்தையும் அதன் தலைவரை கைது செய்வதோடு மாடுகளை அதன் உரிமையாளர்களிடன் சேர்க்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close