[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகளை ஆபாசமாக பேசிய பெண்கள் கைது 

two-women-were-arested-for-threatened-to-murder-the-inspecting-officers-in-omalur

ஓமலூரை அடுத்துள்ள கிராமத்திற்கு ஆய்வுக்காக சென்ற இரண்டு அதிகாரிகளை பெண்கள் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மல்லிக்குந்தம், பள்ளிப்பட்டி, பொட்டனேரி, காளிப்பட்டி மற்றும் குட்டப்பட்டி வழியாக திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திற்கு 800 கிலோவாட் மின்சாரம் கொண்டு செல்லும் வகையில் உயரமான மின்சார டவர்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 

விவசாய நிலங்களில் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்தந்த பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்நிலையில் இத்திட்டம் குறித்து விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகம் மற்றும் இழப்பீடு தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்றனர். 

அப்போது, அந்தப் பகுதியில் உள்ள பெரியசாமி என்பவரின் வீட்டிற்குச் சென்ற போது அங்கு அனுமதியின்றி செயல்பட்டு வரும் சாயப்பட்டறையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அதிகாரிகள் அனுமதியில்லாமல் சாயப்பட்டறை நடத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆலோசனைகள் கூறினர். அப்போது அந்த வீட்டில் இருந்த மைதிலி, அம்சவேணி ஆகியோர் காவல்துறை உதவி ஆய்வாளர் உட்பட அனைத்து அரசு அதிகாரிகளையும் ஆபாசமானப் பேசி திட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் எங்கள் நிலத்திற்கு அத்து மீறி யாரும் வரக்கூடாது என்று கல்லை எடுத்து அடிக்க வந்ததுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர். 

இதைனைத்தொடர்ந்து அதிகாரிகளை வேலை செய்யவிடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தல் உட்பட நான்கு பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இரண்டு பெண்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களை மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close