[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

கெவின் ஆணவக் கொலை வழக்கை முடிக்க நீதிமன்றம் 6 மாத கெடு 

kevin-p-joseph-was-abducted-and-allegedly-murdered-by-his-wife-neenu-s-family

கெவின் கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் கெவின் பி ஜோசப். இவரும் கொல்லம் பகுதியை சேர்ந்த நீனு என்ற பெண்ணும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். 

இந்நிலையில், கல்லூரி படிப்பை முடித்த கெவின் வேலைக்காக துபாய் சென்றுவிட்டு கடந்த ஜனவரி மாதம் மீண்டும் வீடு திரும்பினார். இதையடுத்து கொல்லம் தென்மலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நீனுவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார் கெவின்.  

இதைத்தொடர்ந்து நீனுவின் பெற்றொரிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் இருவரும் வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் நீனு வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து கெவினும் நீனுவும் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளனர். இதையறிந்த நீனுவின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இருவரும் இருக்கும் இடத்தை கண்டறிந்த போலீசார் நீனுவை கெவினிடம் இருந்து பிரித்து வலுக்கட்டாயமாக அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். 

பின்னர், நீனுவின் அண்ணன் 12 பேர் வீட்டினுள் புகுந்து கெவினை தாக்கி கடத்தி சென்றுள்ளார். இதைப்பார்த்த கெவினின் நண்பர் அனிஷ், போலிஸில் புகார் அளித்தார். 

இதைத்தொடர்ந்து தென்மலை அருகே சாலியக்கரா பகுதியில் உள்ள ஒரு குட்டையில் இரு கண்களும் தோண்டப்பட்ட நிலையில் கெவின் பிணமாக மிதப்பதாக புனலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

விசாரணையில், கெவின் கலப்பு திருமணம் செய்ததால் ஆணவக் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த வழக்கில் நீனுவின் பெற்றோர் உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில், கெவின் கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close