[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்
  • BREAKING-NEWS நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் - ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ் உட்பட 10பேரை மார்ச் 27ல் மீண்டும் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உதகை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.52 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.87 காசுகளாகவும் விலை நிர்ணயம்

மாற்றுத்திறனாளிகள் ரயில் பெட்டியில் 40 கிலோ கஞ்சா ! 

40-kg-of-cannabis-sativa-is-seized-in-train-at-chennai

சென்னை சென்ட்ரல் வந்த ரயிலின் பெட்டியில் இருந்து 40 கிலோ கஞ்சா காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயிலில் கடத்தி‌வரப்பட்ட 40 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர். கேரளாவிலிருந்து அதிகாலை ஒன்ற‌‌ரை மணியளவில் வந்த தன்பாத் ஆலப்புழா ரயிலின் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி முன் கேட்பாரற்று கிடந்த 4 பைகளை ரயில்வே காவல்துறையி‌னர் கண்டெடுத்தனர். யாரும் அந்த பைகளுக்கு உரிமை கோராத நிலையில், அதில், ‌40 கிலோ கஞ்சா சிறுசிறு பொட்டலங்களாக பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது. ரயிலில் கஞ்சா கடத்தி வரப்பட்டதா அல்லது வேறு யாரேனும் நடைமேடையில் வைத்துச் சென்றனரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close