[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரியில் கூட்டு வல்லுறவுக்கு ஆளான சிறுமி : 5 பேர் கைது

sexual-harassment-to-child-in-puducherry

புதுச்சேரியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுச்சேரியில் வறுமை காரணமாக தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சிறுமியும், வழுதாவூரைச் சேர்ந்த விக்கி என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் வழுதாவூரில் உள்ள தோப்புக்கு சிறுமியை அழைத்துச் சென்ற விக்கி, அவரை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதனையெடுத்து பெற்றோ‌ர் அளித்த புகாரின் பேரில், குழந்தைகள் நல பாதுகாப்பு குழுத் தலைவர்‌, சம்பவம் குறித்து சிறுமியிடம் கேட்டறிந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் குற்றச்சாட்டுக்கு ஆளான அருண், விக்கி உள்பட 8 பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 

அவர்கள் 8 பேரையும் காவல்துறையினர் தேடி வந்தனர், இந்நிலையில் விக்கி, அவரது நண்பர்கள் முகிலன், கண்ணதாசன், சூர்யா, தேவா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவாகவுள்ள அசோக், கலை, சூர்யா ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதுகுறித்து கைது செய்யப்பட்டோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close