[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
  • BREAKING-NEWS நவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

திரைப்பட பாணியில் ‘ஸ்கெட்ச் போட்டு’ரப்பர் மில் உரிமையாளர் கடத்தல்

rubber-factory-owner-kidnapped-by-the-film-style-method-in-madurai

மதுரை மாவட்டம் மேலூர் அருகே திரைப்‌பட பாணியில் ரப்பர் மில் உரிமையாளர் காருடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலுரை அடுத்த அரிட்டாபட்டியில் தனியார் ரப்பர் தொழிற்சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்றது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஜோசப் மேத்யூதான் தொழிற்சாலையின் உரிமையாளர். இந்நிலையில் உரிமையாளர் ஜோசப் மற்றும் அவரது உதவியாளர் மாத்தாய், ஓட்டுநர் ஸியாம்லா ஆகிய 3 பேர் இன்று காலை மதுரையிலிருந்து அரிட்டாபட்டியிலுள்ள ரப்பர் தொழிற்சாலைக்கு சென்றனர். அப்போது கார் நரசிங்கம்பட்டியை அடுத்த மலைப் பகுதியில் சென்ற போது, முன்னே சென்ற கார் இவர்கள் சென்ற கார் மீது மோதுவது போல் சென்றது. பின்னர், இரண்டு கார்களில் உள்ளவர்களும் ஓரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென ரப்பர் தொழிற்சாலை உரிமையாளர் ஜோசப் மேத்யூ மற்றும் உதவியாளர் மாத்தாய் ஆகிய இருவரை வாக்குவாகத்தில் ஈடுபட்டவர்கள் காருடன் கடத்தி சென்றுள்ளனர். 

அப்போது, ஓட்டுநர் ஸியாம்லாவின் அலரல் சத்தம் கேட்டு அரசு பேருந்தில் இருந்தவர்கள் இறங்கி விசாரித்துள்ளனர். இதில், கடத்தலில் ஈடுபட்டவர்களில் ஒரு காரை பொதுமக்களே மடக்கி பிடித்தனர். இதில் கடத்திலில் ஈடுபட்ட மதுரை வில்லபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை காருடன் பிடித்து மேலூர் காவல்நிலையத்தில் அவர்கள் ஒப்படைத்துள்ளனர். கடத்தல் சம்பவம் குறித்து தகவலறிந்த மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளார் மணிவண்ணன் உத்தரவின் பேரில், மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வனிதா தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தேடுதல் வேட்டையை துவங்கியது.

கடத்தப்பட்ட ஜோசப் மேத்யூ செல்போன் எண்ணின் டவர் இருப்பிடத்தை வைத்து சிவகங்கை மாவட்டம் படமாத்தூரில் கடத்தப்பட்ட காரை மட்டும் தனிப்படை காவல்துதுறையினர் கைப்பற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து கடத்தல் கும்பலை பின் தொடர்ந்து மதுரை மாவட்ட காவல்துறையினர் விரைந்துள்ளனர். அரிட்டாபட்டியில் பிடிபட்ட மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த கார்த்திகிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் திரைப்பட பாணியில் வரைபடம் தயாரித்து, உரிமையாளரை பின் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து கார், கத்தி, காருக்கு பயன்படுத்த கூடிய பல்வேறு நம்பர் பிளேட்டுகள் மற்றும் வரைபடம் உள்ளிட்டவற்றை காவால்துறை பறிமுதல் செய்துள்ளனர். 

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் கடத்தலில் 7 பேர் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கடத்தலில் ஈடுபட்டவர்களை சில மணி நேரங்களில் கடத்தல்காரர்களை நெருங்கிவிட்டதாக கூறும் காவல்துறையினர், அவர்களை பிடித்த பின்னரே முழுமையான தகவல் தெரியவரும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகின்றது. தற்போது சிவகங்கை மாவட்ட காவல்துறையினரும் கடத்தல் கும்பல் சென்ற பகுதியிலுள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து அதில் சந்தேகத்திற்குள்ளான வாகனத்தின் காட்சியை வைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close