[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா
  • BREAKING-NEWS பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி

மகளுக்கு பாலியல் வன்கொடுமை! கண்டித்த மனைவியை கழுத்தறுத்து கொன்ற கொடூர கணவன்!

assam-man-charged-with-raping-his-minor-daughter-kills-wife-in-court

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த அசாம் மாநிலம் திப்ருகரை சேர்ந்த ஒருவர், தனக்கெதிராக போலீஸில் புகாரளித்த தனது மனைவியையும் அம்மாநில நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து கழுத்தறுத்து கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், தனது கணவர் பெற்ற மகளையே கற்பழித்த குற்றத்திற்காக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் அந்த நபர் கைது செய்யப்பட்டு திப்ருகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 9 மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்த அவர், இம்மாதம் 6ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார் என்று கூறினார்.

மேலும், சம்பவத்தன்று தங்களது மகளோடு தந்தையும் தாயும் நீதிமன்ற வளாகத்தில் இருந்தனர். அப்போது திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது மனைவியின் கழுத்தை அறுத்தார். நிகழ்விடத்திலேயே நிலைகுலைந்து விழுந்த அவரது மனைவி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தப்ப முயன்ற பெண்ணின் கணவரை அங்கிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற வளாக பாதுகாப்பு ஊழியர்கள் மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close