[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

'ஸ்டார்மிங் ஆப்ரேஷன்'; 2750 ரவுடிகள் கைது: போலீஸ் அதிரடி

2750-rowdy-arrested-in-chennai

சென்னையில் கடந்த 4 நாட்கள் நடந்த போலீஸ் சோதனையில் 2750 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக செயின் மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து கொண்டே சென்றன. சென்னையில் உச்சகட்டமாக ஒரே நாளில் 14 செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. அத்தோடு மட்டுமல்லாது பைக் ரேஸ்களும் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது. முதல்வர் வீட்டின் அருகேயும், டி.ஜி.பி அலுவலகத்தின் அருகேயும் சட்ட விரோதமாக இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர். இதனையடுத்து குற்றச்சம்பவங்களை தடுக்க, போலீசார் ‘ஸ்டார்மிங் ஆப்ரேஷன்’ நடத்தினர். அதில் ஒரே இரவில் 1000 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த 4 நாட்களாக போலீசார் இந்த சோதனையை நடத்தினர். இதுவரை 2750 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில் நீதிமன்ற பிடியாணை கொண்டவர்கள் 68 பேரும், தலைமறைவு குற்றவாளிகள் 53 பேரும் பிடிபட்டனர். இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே இரவு பணி காவலர்களுடன் சேர்த்து ,கூடுதலாக இரண்டு "ஷிப்ட்" போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் வழக்கமாக இரவுப் பணியில் ஈடுபடும் காவலர்களை விட, கூடுதலாக  இரவில் 6 துணை ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பை பலப்படுத்தினர். கூடுதலாக ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் இரண்டு உதவி ஆணையர் தலைமையில் 30 காவலர்கள், இரண்டு ஷிப்டுகளில் ரோந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு தொடர்ந்து காவலர்கள் சோதனையில் ஈடுபட்டால் தான் மக்கள் அச்சமின்றி நடமாட முடியும் என்பது பொதுமக்கள் கருத்தாக உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close