[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

அம்மாவான சிறுமியின் அலறல் கதை!

i-begged-him-to-let-me-go-but-he-raped-me

சமீப காலமாக பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன வடமாநிலங்களில்! இதுபோன்ற சம்பவங்கள் பற்றிய செய்தி தினமும் நான்கைந்து வெளியாகின்றன மீடியாவில். சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களும் ஷாக் கொடுக்கின்றன. புகார் கொடுக்கப்பட்ட கணக்குகள் வெளிவந்தாலும் சமூகத்துக்குப் பயந்து புகார் கொடுக்கப்படாமலும் வெளியே சொல்லப்படாமலும் எத்தனையோ பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் பத்திரமாக புதைக்கப்பட்டும் வருகின்றன.

இந்நிலையில் 14 வயதில் அம்மாவான ஒரு சிறுமியின் கண்ணீர் கதையை வெளியிட்டிருக்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில நாளிதழ்! இப்போது, அந்தச் சிறுமியின் வயது 17. அதன் சுருக்கம் இங்கே:

’’அப்ப நான் படிச்சுட்டு இருந்தேன். எங்க வீட்டுல வாடகைக்கு இருந்தது ஒரு குடும்பம். அதுல இருந்த பையன், என்கிட்ட அன்பா பழகுவான். எனக்கும் அவனைப் பிடிக்கும். அவன்கிட்ட அடிக்கடிப் பேசிட்டிருக்கணும்னு நினைப்பேன். அது அன்புதான். அதுக்கு மேல அவன் மேல ஈர்ப்பு ன்னு சொல்ல முடியாது. ஒரு சகோதரனுக்கு கொடுக்கிற அன்பு மாதிரி. 

எங்க வீட்டுல, ’அவன் பார்வை சரியில்ல, அவன்கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையா இரு’ன்னு சொன்னாங்க. ’அவனை போய் தப்பா பேசறாங்க ளே?’ன்னு எனக்கு கோபம் வரும். அவனை ரொம்ப நல்லவன்னு நம்பிட்டிருந்தேன். ஒரு நாள், உத்தரப்பிரதேசத்துல நடந்த ஒரு கல்யாணத் துக்காக அப்பா- அம்மா, அக்கா எல்லாரும் போனாங்க. நான் வீட்டுல, தனியா இருந்தேன். ’வீட்டைப் பூட்டிட்டு உள்ளே இரு’ன்னு அம்மா சொல் லிட்டுப் போனாங்க. எல்லாரும் வீட்டைத் திறந்து போட்டுட்டு இருக்கும்போது, நான் மட்டும் பூட்டிட்டு இருந்தா நல்லாவா இருக்கும்?னு நினைச்சு, பூட்டலை. 

மத்தியான நேரத்துல ஹாலிங் பெல் சத்தம். வந்து பார்த்தேன். வாடகைக்குக் குடியிருந்த குடும்பத்து பையன் நின்னான். என்னன்னு விசாரிச் சேன். ‘ஒரு நல்ல டீ குடிக்கலாம்னு வந்தேன்’னு சொன்னான். ’உள்ள வா’ன்னு சொன்னேன். வந்தான். நான் கிச்சனுக்குப் போனேன். வீட்டுக்கு ள்ள வந்தவன், திடீர்னு கதவைப் பூட்டினான். எனக்கு அதிர்ச்சி. ’ஏன், கதவைப் பூட்டறே?’ன்னு கேட்டேன். ‘உம்மேல உயிரையே வச்சிருக்கேன் ’ னு சொல்லிட்டு நெருங்கி வந்தான். ’ச்சீ... நீ எனக்கு சகோதரன் மாதிரி’ன்னு சொன்னேன். ’அப்படி சொல்லாதே, நான் உன்னை கல்யாணம் பண்ணணும் நினைக்கிறேன்’ன்னு வேகமாக வந்தவன், கட்டிப்பிடிச்சான். அவனைத் தள்ளினேன். அவன் நோக்கம் எனக்குப் புரிஞ்சுது. என் அம் மா சொன்னப்ப எல்லாம் அதை தப்பாவே நினைச்சேன். ஆனா, அவங்க சொன்னதுதான் நடந்தது.

வெறி கொண்ட மட்டும் அவன்கிட்ட இருந்து தப்பிக்கப் போராடுனேன். ஒரு கட்டத்துல அவன் மிருகமானதைப் பார்த்தேன். என்னை ஓங்கி, மாறி மாறி அடிச்சான். என் முயற்சி தோல்வியில முடிஞ்சுது. என்னை அவன் பாலியல் வன்முறை செய்தான். பிறகு இதை வெளியில சொன் னா, பாலியல் வன்முறை செய்ததை வீடியோவா எடுத்து வச்சிருக்கேன். அதை சோசியல் மீடியாவுல் வெளியிட்டுருவேன்’னு மிரட்டினான்.
அந்த நாள், என் வாழ்க்கையை மாத்திடுச்சு! என்னைக்கும் என்னால மறக்க முடியாத நாளாகவும் அது மாறிடுச்சு. அது, 2015-ம் வருஷம் அக் டோபர் மாதம்!

பிறகு வீட்டுல வழக்கம் போல இருந்தேன். என்னோட மாற்றத்தை அம்மா கண்டுபிடிச்சுக் கேட்டாங்க. நான் ஒண்ணும் சொல்லலை. அடிக்கடி வயிறு வலிக்கும். சாதாரண வலின்னு நினைச்சேன். சில மாதங்கள் கழிச்சு, ஒரு நாள் அதிகாலையில என் அடிவயித்துல பயங்கரமான வலி. துடிச்சேன். அம்மாவும் அப்பாவும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனாங்க. நான் கர்ப்பமா இருக்கிற விஷயம் அப்பதான் எனக்கே தெரிஞ்சுது! அந்த இடத்துல வச்சே, அப்பா என்னை அடிச்சு, உதைச்சார். அம்மா மூலையில உட்கார்ந்து கண்ணீர் விட்டார். டாக்டர் கருவைக் கலைக்க வாய்ப்பில்லை. நல்லா வளர்ந்துட்டுன்னு சொல்லிட்டார். மறுநாள் தற்கொலை பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணினேன். வயித்துல வளர்ற குழந்தைக்காக அந்த முடிவை மாத்தினேன்.

இதுக்கு காரணம் யார்ங்கறதைச் சொன்னேன். வழக்கு நடந்தது. அந்த கொடூரனுக்குப் பத்து வருட தண்டனை கிடைச்சது. பத்து மாசத்துல எனக்கு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை அஞ்சு நாள், என்கூட இருந்தது. வாழ்க்கையில ரொம்ப இனிமையான நாள்னு சொன்னா, குழந் தையோட இருந்த அந்த 5 நாள்தான்! பிறகு சமூகத்துக்கு பயந்து அந்தக் குழந்தையை எங்கிட்ட இருந்து பிரிச்சாங்க. யாருமே என்னை தயார் படுத்தலை. எனக்கு ஆதரவா செயல்படலை. அந்தக் குழந்தையை ஒரு குடும்பம் தத்தெடுத்துக்கிட்டது. என் குழந்தை எங்கயோ வளருது. இதுல அந்தக் குழந்தை செஞ்ச தப்பு என்ன? அம்மா உயிரோட இருக்கும்போது அது ஏன் வேற யார்ட்டயோ வளரணும்? 

பிறகு என் குடும்பம் வீட்டை விட்டு என்னை வெளிய விரட்டுச்சு. என் சகோதரிகளையும் என் கூட தொடர்புவச்சுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. ஏன்னா, நான் அவங்களுக்கு அவமானத்தைக் கொடுத்திட்டேனாம்!

இப்ப, இந்த பதினேழு வயசுல என்ஜிஓ நிறுவனத்துல வேலை பார்த்துட்டிருக்கேன்!’’. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close