[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

மனைவியை காதலனோடு சேர்த்து வைத்த ஆச்சரிய கணவன்: சினிமா ஸ்டைலில் ஒரு ’மேரேஜ்’!

man-helps-wife-get-married-to-boyfriend-in-kanpur

’என் லவ்வரோட வாழணும்’ என்று அடம்பிடித்த மனைவியை காதலனோடு சேர்த்து வைத்த கணவனுக்கு பாராட்டுகள் குவிகிறது. 

கான்பூர் அருகிலுள்ள சானிக்வன் கிராமத்தைச் சேர்ந்தவர் சுஜித் என்கிற கோலு. இவருக்கும் அருகிலுள்ள ஷ்யாம்நகர் பகுதியைச் சேர்ந்த சாந்திக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அடுத்த சில நாட்களிலே, ‘இந்த ஏரியா புதுசு. பழகறதுக்கு நாள் ஆகும். நான் எங்க வீட் டுக்குப் போகணும் போல இருக்கு’ என்றார் சாந்தி. ஆசை மனைவி கேட்டு மறுக்க முடியுமா? ‘சரி போயிட்டு வா’ என்று அவரது ஊரில் விட்டு விட்டு வந்தார் சுஜித்.

நான்கைந்து நாட்களில் திரும்பி வந்துவிடுவார் என்று எதிர்பார்த்தால் நீண்ட நாட்களாகியும் சாந்தி வரவில்லை. சுஜித், கோபத்தோடு அவர் வீட்டுக்குப் போனார். ‘ஏன் எங்க வீட்டுக்கு வரலை?’ என்று கேட்டார். அதற்குள் அவர், பொல பொலவென்று கண்ணீர் விட ஆரம்பித்து விட்டா ர். ஏதும் புரியாத சுஜித், ’ஏன் என்னாச்சு?’ என்று கேட்க, பிளாஷ்பேக்கை சொல்ல ஆரம்பித்தார் சாந்தி. 

‘நான் லக்னோவை சேர்ந்த ரவியை காதலிச்சேன். ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருந்தோம். எங்க வீட்டுல சம்மதிக்கலை. திடீர்னு உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. மனசுல ஒருத்தனை வச்சுகிட்டு உங்களோட வாழ பிடிக்கலை’ என்று கண் ணீர் விட்டார் சாந்தி.

‘இவ்ளோதான மேட்டரு, நான் பார்த்துக்கிறேன்’ என்ற சுஜித், ஹீரோ போல யோசித்தார். அவர் பார்த்த சஞ்சய் லீலா பன்சாலியின் ’ஹம் தில் தே சுக்கே சனம்’ படத்தின் கதை ஞாபகத்துக்கு வந்தது. அந்தப் படத்தில் சல்மான்கானும் ஐஸ்வர்யா ராயும் காதலிப்பார்கள். அதை மறைத்து ஐஸ்வர்யாவை, அஜய் தேவ்கனுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். பின்னர் விஷயம் தெரிந்ததும் சல்மான் கானுடன் ஐஸ்வர்யா வை சேர்த்து வைப்பார் அஜய் தேவ்கன்.

இதே போல களத்தில் இறங்கினார் சுஜித். நேராக லக்னோ சென்று ரவியை சந்தித்தார். ’உங்க காதல் மேட்டர் எனக்கு தெரியும். உங்க ரெண்டு பேருக்கும் நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன். நான் சொல்றபடி கேளுங்க’ என்று பேசினார்.  ரவியும் சம்மதித்தார். பிறகு தனது வீட்டிலும் சாந்தியின் வீட்டிலும் பேசினார். சாந்தி வீட்டில் இதை ஏற்கவில்லை. பிறகு அந்த ஊர் பெரிய மனிதர்களைச் சந்தித்தார். 

‘ஒரு முறை வாழப்போறோம். மனசுக்குப் பிடிச்சவங்களோட வாழ்ந்துட்டு போகட்டுமே’ என்று பெரியவர்கள் தத்துவமாகச் சொல்ல, அந்த ஒப் புதலுடன் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விஷயத்தைச் சொன்னார். அவர்கள் ’என்ன பிரச்னை வந்தாலும் நாங்க பார்த்துக்கிறோம்’ என் ற னர்.

இதையடுத்து சானிக்வன் பகுதியில் உள்ள ஹனுமன் கோவிலில்,  உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இருவருக்கும் திரு மணத்தை நடத்திய சுஜித், ‘நல்லாருங்க’ என்று வாழ்த்தி அனுப்பி விட்டார். இதையடுத்து சுஜித்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

இதுபற்றி சுஜித் கூறும்போது, ‘முதல்ல நெகட்டிவ் எண்ணம்தான் எனக்குள்ள வந்தது. ரெண்டு பேரையும் போட்டுத்தள்ளிரலாம்னு கூட  நி னைச்சேன். அப்படி செஞ்சா, தேவையில்லாம  குடும்பம்தான் பாதிக்கப்படும்னு தோணுச்சு. உடனே பெரியவங்களோட கலந்துபேசி இப்படி யொரு முடிவை எடுத்தேன். இப்ப எல்லாரும் சந்தோஷமா இருப்பாங்கள்ல’ என்கிறார் சுஜித். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close