[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் - அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவு செய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS பொள்ளாச்சி விவகாரம்: சிபிஐ விசாரணை மூலம் விரைவில் உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது- சிபிஐ முன் ஆஜரான பின் நக்கீரன் ஆசிரியர் கோபால் பேட்டி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்- டிடிவி தினகரன் அறிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்

கொலையில் முடிந்த வாய் பேச்சு: 6 பேர் கொண்ட கும்பல் நடத்திய கொடூரம்..!

one-murder-near-kannagi-nagar-in-chennai

வாய் தகராறு காரணமாக கண்ணகி நகரில் இளைஞர் ஒருவரை ஆறு பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விமல்(23). பெயிண்டராகவும், ஞாயிற்றுக்கிழமையானால் இறைச்சிக்கடையும் நடத்தி வந்தார். இரு தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது விமல் நடனம் ஆடியுள்ளார். அப்போது ஒரு தரப்பினற்கும் விமலுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் விமலை கொலை செய்ய அந்த கும்பல் முடிவு செய்துள்ளது.  அதன்படி நேற்று இரவு 8:30 மணி அளவில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த விமலை கண்ணகிநகர் பகுதியை சேர்ந்த நண்பன் மோஜோ(18), மது அருந்த ஏரிக்கரை அருகே கூட்டிச் சென்றுள்ளார். மது அருந்திய பின்னர் 6 பேர் கொண்ட கும்பல் விமலை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிஓடி விட்டனர்.

தகவல் அறிந்த கண்ணகி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விமலின் உடலை மீட்டு இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலை நடந்தவுடன் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க கண்ணகி நகர் பகுதியில் காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விமலின் தந்தை வீரய்யன் கொடுத்த புகாரின் பேரில் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்துள்ள கண்ணகி நகர் போலீசார் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். கொலை தொடர்பாக கல்லூரி மாணவன் மோஜோ(18), பிரவீன்(18) உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தகவல்கள்: சாந்தகுமார், செய்தியாளர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close