[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு

காதலன் கண்முன் 20 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

woman-allegedly-gang-raped-in-front-of-boyfriend-at-south-goa-beach

காதலன் கண்முன்னே, இருபது வயது இளம்பெண், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவாவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கோடை காலத்தில் இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள். உள்ளுர் காதலர்களும் இங்குள்ள கடற்கரைக்கு வந்து காதல் வளர்ப்பது வழக்கம். தெற்கு கோவா பகுதியில் உள்ள கோல்வா கடற்கரையின் விரிவாக்கம், செர்னாபடிம் என்ற கடற்கரை பகுதி. இந்தப் பகுதி எப்போதும் சுத்தமாக இருக்கும் என்பதால் இங்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்நிலையில் பக்கத்து ஊரைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர், தனது காதலருடன் இங்கு நேற்றுமுன் தினம் இரவு வந்தார். அப்போது கடற்கரையில் யாருமில்லை. இதையடுத்து இருவரும் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருந்தனர். 

(செர்னாபடிம் கடற்கரை)

அப்போது திடீரென்று அங்கு வந்த மூன்று இளைஞர்கள், இருவரையும் மிரட்டி உடைகளை கழற்றும் படி கூறினர். பின்னர் அவர்களை நிர்வா ணப் படுத்தி புகைப்படம் எடுத்தனர். அதைக் காட்டி அவர்களிடம் இருந்த பணத்தைக் கேட்டனர். பின்னர் காதலன் கண் முன்பே அந்த இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். மூவரும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அதை வீடியோவும் எடுத் துள்ளனர். பிறகு இந்த சம்பவம் பற்றி போலீசில் சொன்னால் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணும் அவர் காதலரும் தெற்கு கோவா போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர். போலீசார் பாதிக்கப்பட்டப் பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. போலீ சார் உடனடியாக தீவிர விசாரணையில் இறங்கினர். இதையடுத்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட சஞ்சிவ் தனஞ்செய் (23), ராம் சந்தோஷ் (19) ஆகியோரை கைது செய்தனர். மற்றொருவர் தப்பியோடிவிட்டார். இவர்கள் இந்தூரில் இருந்து சுற்றுலாவுக்காக வந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. தப்பியோடிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close