[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.96 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.51 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு

காதலனின் தொலைந்த போனில் அந்தரங்க வீடியோ: மிரட்டப்பட்ட இளம் பெண், மடக்கிய போலீஸ்!

stole-a-phone-saw-nudes-then-blackmailed-for-sex-caught

பெங்களூர், லால் பகதூர் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் கேஷவ் விஜயம் (26). டிரோன் பைலட். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் மைசூர் சென் றுவிட்டு காரில் பெங்களூர் திரும்பிக் கொண்டிருந்தார். கங்கேரி என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தபோது, சாலையில் நின்ற மூன்று பேர் காரை நிறுத்துமாறு கைகாட்டினர். அதில் ஒருவன், காரின் வீல் கப்பை காண்பித்து ’யாரோ ஒருவரின் காரில் இருந்து விழுந்துவிட்டது. உங்க ளுடையதா?’ என்று கேட்டான். அவன் கேட்பது புரியாததால் காரில் இருந்து இறங்கி வந்து என்னவென்று விசாரித்தார். 

பிறகு தனது காரின் வீலை சரிபார்த்தார். வீல்கேப் அதில் இருந்தது. தனக்கானது இல்லை என்று சொல்லிவிட்டு காருக்குள் ஏறினார். சாவியை காணவில்லை. தேடிப் பார்த்தார். பின் சீட்டில் கிடந்தது. சந்தேகத்துடன் எடுத்து ஓட்டிச் சென்றார். பெங்களூர் சென்ற பின்தான் டேஷ்போர்டில் இருந்த தனது செல்போனை காணவில்லை என்பது தெரியவந்தது. பிறகு பெங்களூர் வந்து அந்த நம்பருக்கு போன் செய்து பார்த்தார். அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இது பற்றி இமெயிலில் புகார் அனுப்பிவிட்டு வேலையில் பிசியாகிவிட்டார் கேசவ். 

இந்நிலையில் போனைத் திருடியவன் அதை நோண்டினான். உள்ளே ஏகப்பட்ட நிர்வாணப்படங்களும் பாலியல் வீடியோவும் இருந்தது. அந்த நிர்வாணப் படங்களில் இருந்தது ஒரே பெண் என்பதும் அவர்தான் அந்த வீடியோவிலும் இருக்கிறார் என்பதும் தெரிந்தது.  பின்னர் போனில் நோண்டியதில் புகைப்படத்துடன் இருந்த அந்தப் பெண்ணின் பேஸ்புக் முகவரி கிடைத்தது. 

இந்நிலையில் அந்த இளம் பெண், கேசவ்வை திடீரென்று அழைத்தார் . சில நாட்களுக்கு முன் தன்னிடம் பேஸ்புக்கில் ஒருவன் பிரண்ட் ஆனதாகவும் அவன் தனது நிர்வாணப் படத்தை அனுப்பியதாகவும், அதையும் உன்னுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவையும் டெலிட் பண் ண வேண்டும் என்றால் 20 லட்சம் ரூபாய் வேண்டும் என்றும் தனது ஆசையையும் தீர்க்க வேண்டும் என்று மிரட்டுவதாகக் கூறினார். இதை செய்யவில்லை என்றால் நிர்வாணப் படத்தையும் நெருக்கமான வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியதாகவும் சொன்னார். 

ஷாக் ஆன கேசவ், தனது செல்போன் காணாமல் போன விவரத்தை சொன்னார் அவரிடம். பின்னர், உடனடியாக இதுபற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் கூறினார்.

போலீசார், தனி டீம் அமைத்தனர். அந்த இளம்பெண்ணை, அந்த திருட்டுப் பயலிடம் சாட் பண்ணிக்கொண்டே இருக்கும்படி கூறினர். பின்னர், ’பணத்தை தந்து வருகிறேன், அந்தப் புகைப்படங்களையும் வீடியோவையும் அழித்துவிட வேண்டும்’ என்று கேட்டார், அந்த இளம் பெண்.  போனை திருடியவன் சரி என்று சொல்லிவிட்டு ஓர் இடத்தைக் குறிப்பிட்டான். அந்த இடத்துக்கு ஒரு பையுடன் சென்றார் இளம்பெண். சில போலீஸ்காரர்கள் சாதாரண உடையில் அவரை பின் தொடர்ந்து நின்றனர். அப்போது பணத்தை வாங்க வந்த அந்த திருடனை மடக்கிப் பிடித்தனர். அவன் ராகவேந்திர சிங் என்ற லவ்லி சிங் என்பதும் உல்லாலா மெயின் ரோடு அருகே வசிப்பதும் தெரிய வந்தது. அவனை கைது செய்த போலீசார், இதுபோன்ற வேறு ஏதும் சம்பவத்தில் அவன் ஈடுபட்டுள்ளானா என்பது பற்றி விசாரித்து வருகின்றனர். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close