[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்

ஆசிரியையை கடத்திய அரசியல் பிரமுகர்: மூன்றாவது திருமணத்திற்கு முயற்சி? 

who-was-kidnapped-by-the-teacher

சேலம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியையை விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கடத்தியதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள ரோஜா நகரை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் மாலதி. இவர் ஓமலூர் அருகேயுள்ள பண்ணபட்டி அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மாலதி ஈரோட்டில் உள்ள அவரது அத்தை வீட்டிற்குச் சென்றுவிட்டு நேற்று மாலை ஓமலூர் வந்துள்ளார். அப்போது பேருந்து நிலையத்தில் இருந்த ஒரு குமபல் ஆசிரியை மாலதியை ஒரு காரில் கடத்தி சென்றுள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் இதுகுறித்து ஓமலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

மேலும், தனது மகள் கடத்தப்பட்டது குறித்து தகவல் அறிந்த அரசுப் பள்ளி ஆசிரியை மாலதியின் அப்பாவும் வந்து ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், தனது மகள் மாலதி பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப்  பணியாற்றி வருகிறார். நேற்று மாலை ஈரோட்டில் இருந்து தனது அத்தையுடன் ஓமலூர் பேருந்து நிலையம் வந்தார். கழிப்பிடம் சென்று வருவதாக கூறி சென்ற அத்தை, திரும்பி வந்து மாலதியை கடத்தி சென்று விட்டதாக கூறியுள்ளார். மேலும், தனது மகளை பணத்திற்காக ஆர்.சி.செட்டிபட்டியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகி மணிகுமார் என்பவர்தான் கடத்தி சென்று விட்டதாகவும், மேலும், தனது மகளை திருமணம் செய்துகொள்ளவே கடத்தி சென்று இருக்கலாம் என்று கூறியுள்ளார். 

மேலும், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட நிர்வாகி மணிக்குமாருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகளும், ஆறு குழந்தைகளும் உள்ள நிலையில் தனது மகளை ஏமாற்றி கடத்தி சென்றுள்ளார். அவரிடமிருந்த தனது மகளை மீட்டுத்தருமாறு புகாரில் கூறியுள்ளார். இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மணிக்குமார், அரசுப் பள்ளி ஆசிரியை மலைதியை மூன்றவதாக திருமணம் செய்து கொண்டதாகவும், மாலதி சம்மதத்துடனேயே இந்தத் திருமணம் நடந்துள்ளதாகவும் கூறினர். மேலும், புகார் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தேடி வருகின்றனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close