[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்

’என்னை விட்டுடுங்க...’ பாலியல் கும்பலிடம் கதறும் டீன்ஏஜ் பெண்: வைரலாகும் வீடியோ, போலீஸ் தவிப்பு!

gang-rape-video-goes-viral-bihar-police-seek-public-help-to-find-culprits

பாலியல் வன்கொடுமை செய்பவர்களிடம் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சும் டீன் ஏஜ் பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. இது எப்போது, எங்கு எடுக்கப்பட்ட வீடியோ என தெரியாததால் போலீஸ், தவித்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பீகார் போலீஸ் தலைமையகத்துக்கு வாட்ஸ் அப் மூலம் ஒரு வீடியோ அனுப்பப்பட்டிருந்தது. அதைப் பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி. அந்த வீடியோவில் டீன் ஏஜ் பெண் ஒருவரை, ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்கிறார். அருகில் இருக்கும் இருவர் அதை வீடியோ எடுக்கின்றனர். இன்னொருவர் சிரித்துக்கொண்டு நிற்கிறார். அவர்களிடம் அந்தப் பெண், தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சி கதறி அழுகிறார். ஆனால், அதைக் கண்டுகொள்ளாமல் அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்கிறார். இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப் பட்டது என்று தெரியவில்லை.

அந்த வீடியோவில் பேசுவர்களின் வழக்கு, கயா பகுதியில் பேசுவதைப் போல இருப்பதால் அங்குள்ள போலீசாருக்கு இதை அனுப்பி குற்ற வாளிகளைப் பிடிக்க போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். பீகார் மாநிலத்தில் இந்த வீடியோ கடந்த சில நாட்களாக பரபரப்பாக சுற்றி வருகிறது. பல்வேறு வாட்ஸப் குரூப்களிலும் பகிரப்பட்டு வருகிறது. 

இது தொடர்பாக யாரும் இதுவரை மாநிலத்தின் எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் அளிக்காததால் போலீசார் தவித்து வருகின்றனர். அதோடு இந்த விவகாரத்தில் பொதுமக்களும் உதவ வேண்டும் என்று போலீசார் கோரிக்கை வைத்துள்ளனர். 

கயாவின் போலீஸ் அதிகாரி ராஜீவ் மிஸ்ரா கூறும்போது, ‘இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம். குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். அவர்களைப் பிடிக்க பொதுமக்கள் உதவவேண்டும்’ என்றார்.

சமீபகாலமாக, வடமாநிலங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கி றது.

பீகாரில், சமீபத்தில்தான் ஒரு கும்பல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து வெளியிட்டது. இந்தக் குற்றவாளிகள் அனைவரும் பின்னர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தின் ஈரம் காய்வதற்குள் அடுத்த வீடியோ வெளியாகி அங்கு பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close