[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

இளம்பெண்ணை அறைக்குள் பூட்டியவருக்கு தர்ம அடி

sexual-harassment-to-women-owner-arrested

திருவல்லிக்கேணி அருகே இளம் பெண்ணை அறையில் வைத்து பூட்டி பாலியல் தொல்லை தந்த மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னை திருவல்லிக்கேணி அருகே மருந்தகம் நடத்தி வருபவர் முகமது அலி. இவரது கடையில் இளம்பெண் ஒருவரும் பணிபுரிந்து வந்துள்ளார். இதனிடையே தன்னிடம் வேலை பார்க்கும் அந்த இளம்பெண்ணை முகமது அலி அறைக்குள் வைத்து பூட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.  உரிமையாளரின் பாலியல் தொல்லையை தாங்க முடியாத அப்பெண் அலறல் சத்தம் போட்டிருக்கிறார்.

உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், சத்தம் எங்கே இருந்து வருகிறது என தெரியாமல் பதறியிருக்கின்றனர். பின்னர் சத்தம் மருந்தகத்தில் இருந்து வருவதை உணர்ந்த அவர்கள், கதவை உடைத்து அப்பெண்ணை மீட்டனர். பின்னர் மருந்தக உரிமையாளர் முகமது அலியை அடித்து உதைத்த பொதுமக்கள் அவரை ஜாம்பஜார் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close