[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

தம்பி மனைவியை துண்டுத் துண்டாக வெட்டிக் கொலை செய்த அண்ணன்

thiruvarur-man-killed-his-brothers-wife

திருவாரூரில் பெண்ணை கொலை செய்து துண்டுத் துண்டாக வெட்டி மூட்டைகட்டி முட்புதரில் வீசியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலாலவந்தச்சேரியை சேர்ந்தவர் ஜோசப் ராஜசேகர். இவருக்கும் எஸ்தர் என்பவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் உள்ளார். ராஜசேகர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். எஸ்தர் தனது குழந்தையுடன் மேலாலவந்தச்சேரியில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதியில் இருந்து எஸ்தரை காணவில்லை. இதுதொடர்பாக எஸ்தரின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து வந்த ஜோசப் தனது மனைவியை காணவில்லை என  காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை காவல்துறையினர் எஸ்தரின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் ஜோசப்பின் அண்ணன் நெல்சன் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். சொத்துப்பிரச்னை காரணமாக எஸ்தரை கொலை செய்ததை நெல்சன் ஒப்புக்கொண்டார். தம்பி மனைவி எஸ்தரை கொலை செய்து துண்டுத் துண்டாக வெட்டி இரண்டு மூட்டைகளில் கட்டி கோரையாற்றில் உள்ள புதரில் வீசியதாக தெரிவித்தார். இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் புதரில் இருந்த இரண்டு மூட்டைகளை கைப்பற்றினர். அதில் கொலை செய்யப்பட்ட எஸ்தரின் உடல் துண்டுத் துண்டாக வெட்டி மூட்டைக்குள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close