[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 3 குழந்தைகளை விற்றதாக ராசிபுரத்தில் கைதான குழந்தை விற்பனை தரகர் அமுதா வாக்குமூலம்; விருப்ப ஓய்வுபெற்ற செவிலியரும் தரகருமான அமுதாவிடம் போலீசார் தீவிர விசாரணை
  • BREAKING-NEWS சர்வதேச உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் மனு பாகர், சவுரப் சவுத்ரி தங்கம் வென்றனர்
  • BREAKING-NEWS இணையதள குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதள பிரதிநிதிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்தி ஜூன் 6ல் அறிக்கை தர வேண்டும் - சைபர் குற்றங்களை தடுக்க சமூகவலைதள கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இலங்கையின் நுவரெலியா நகரில் ஹவேலியா பகுதியில் 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் கொழும்பு கடற்கரை முத்துவாரம் பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஆயுதங்களுடன் மூவர் கைது
  • BREAKING-NEWS உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை விசாரிக்க இருந்த குழுவிலிருந்து நீதிபதி ரமணா விலகல்; நீதிபதி ரமணா விலகலால் நாளை தொடங்கவிருந்த விசாரணையில் தாமதம் ஏற்படலாம் என தகவல்
  • BREAKING-NEWS வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி

3 மாநில போலீசாரை திண்டாட வைத்த ராக்கெட் ராஜா.. யார் இவர்..? சிக்கியது எப்படி..?

rowdy-rocket-raja-arrested-in-chennai

தமிழகம் உள்ளிட்ட 3 மாநில காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடி ராக்கெட் ராஜா‌ சென்னையில் பிடிபட்டுள்ளார். யார் இந்த ராக்கெட் ராஜா? அவர் பின்னணி என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.

நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த ராக்கெட் ராஜா, 1990 கால கட்டத்தில் முக்கிய ரவுடியாக உருவெடுத்தவர். ரவுடி வெங்‌டேச பண்ணையாருக்கு வலதுகரமாக இருந்த ராக்கெட் ராஜா, அவர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட பின், அவரின் சகோதரர் சுபாஷ் பண்ணையாருடன் கூட்டு சேர்ந்து செயல்படத் தொடங்கினார்.

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ரவுடி சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திய அவர், கொலை, ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறிப்பது,‌ கட்டப் பஞ்சாயத்து எ‌ன பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது 3 கொலை வழக்கு உள்பட 16 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 20‌09-ஆம் ஆண்டு ராக்கெட் ராஜா வீட்டில் நடந்த சோதனையில், அங்கு ராக்கெட் லாஞ்சரும்‌‌, ஏ.கே.47 ‌‌ரக‌ துப்பாக்கிகளுக்‌கு பயன்படுத்தக் கூடிய தோட்டாக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ராக்கெட் லாஞ்சர் வைத்திருந்ததால், அவரது பெயர் ‘ராக்கெட் ராஜா’ என்ற‌ அடைமொழியுடன் பிரபலமானது.‌ அரிவாளும், பட்டா கத்திகளுமே பிரதான ஆயுதமாக இருந்த கால கட்டத்தில் துப்பாக்கியைக் கொண்டு எதிரிகளை மிரட்டி கதிகலங்க வைப்பது ராக்கெட் ராஜாவின் ஸ்டைல். தான் கடத்திச் செல்பவர்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியே பல காரியங்களை சாதித்து வந்துள்ளார் அவர். தமிழகத்தில் காவலர்களின் தேடுதல் வேட்டை தீவிரமாகும்போதெல்லாம், அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பதுங்கிக் கொள்வார் ராக்கெட் ராஜா. அவர் முப்பையைச் சேர்ந்த வடமாநில பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அவருக்கு அப்பகுதியில் மிகுந்த செல்வாக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பல முக்கிய பிரமுகர்கள் கொலை வழக்குகளில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்ட ராக்கெட் ராஜா தண்டனையில் இருந்து தப்பியுள்ளார். அரசியல் பின்புலத்தின் காரணமாக சில வழக்குகளில் அவர் கைது செய்யப்படாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் வாட்ஸ் ஆப் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்ட ராக்கெட் ராஜா, நெல்லை காவல்துறையினர் தன்னை என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல திட்டமிட்டிருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் பாளையங்கோட்டையில் கல்லூரி உதவி பேராசிரியர் செந்தில்குமார் வெடிகுண்டு வீசி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி ராக்கெட் ராஜா தான் என விசாரணையில் தெரியவருகிறது. தமி‌ழக காவல்துறை, ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப்பிரிவு, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநில காவல்துறையும் ராக்கெட் ராஜாவை தேடி வந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் கூட்டாளிகளுடன் பதுங்கியிருந்தபோது, தனிப்படை காவலர்களிடம் ராக்கெட் ராஜா சிக்கிக் கொண்டுள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close