[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

புதையல் ஆசை: மனைவி, மகளை நரபலி கொடுக்க துணிந்த பூசாரி சுற்றி வளைப்பு!

priest-held-for-planning-sacrifice-of-wife-daughter

புதையல் எடுப்பதற்காக, தனது மனைவியையும் மகளையும் நரபலி கொடுக்க முயன்ற பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர். 

பெங்களூரு ஞானபாரதி அருகே உள்ள உல்லாலாவைச் சேர்ந்தவர், மகாலிங்கேஷ் (48). இவர் மனைவி சவீதா. இவருக்கு இந்துஜா, பிந்துஜா, லாவண்யா என 3 பெண் குழந்தைகள். இவர், அருகில் உள்ள ருத்ரமுனீஸ்வரா கோயிலில் பூசாரியாக இருக்கிறார். இவர், சமீபத்தில் மார்த்தாண்டா என்பவரிடம் ஜோதிடம் பார்த்துள்ளார். அவர், ’உன் கோயிலில் புதையல் இருக்கிறது. அது உனக்கு கிடைக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட நாளில் கும்ப நட்சத்திரத்தில் பிறந்த இரண்டு பெண்களை நரபலி கொடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதற்காக வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளையும் குறித்துக் கொடுத்துள்ளார்.

(மகாலிங்கேஷ் வீடு)

‘ஆஹா, அந்த புதையல் மட்டும் கிடைச்சா..?’ என்று கனவு காண ஆரம்பித்த பூசாரிக்கு உடனே நினைவுக்கு வந்தது, தனது மனைவியும் மகளும். ஏனென்றால் ஜோதிடர் சொன்ன கும்ப நட்சத்திரத்தில் பிறந்தவர் அவர் மனைவியும் மகளில் ஒருவரும். ’கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு ஏன் அலைவானேன்?’ என்று முடிவு செய்த கொடுமைக்கார பூசாரி, மனைவியையும் பெற்ற மகளில் ஒருவரையும் நரபலி கொடுக்க முடிவு செய்தார்.

இதையடுத்து தினம் இரவில் நிர்வாண பூஜை செய்ய ஆரம்பித்தார். இதற்காக வீட்டுக்கு வெளியே பெரிய குழி தோண்டி, அதில் பூக்களை போட்டு பூஜையை தொடர்ந்தார்.இந்நிலையில் மனைவிக்கு அவரின் திட்டம் தெரிய வந்தது. அலறிய சவீதா, ’அடப்பாவி, புதையலுக்காக மனைவியையும் மகளையும் பலிகொடுக்க துணிந்துவிட்டானே?’ என்று ஷாக் ஆனார்.

இதற்கிடையே தனது 18 வயது மகளை பூஜை பண்ணும்போது நிர்வாணமாக இருக்க வைத்துள்ளார். இதைக் கண்டித்தும், ‘சாமி விவகாரம், உனக்கு ஓன்னும் தெரியாது, தூரப் போ’ என்று மனைவியைத் திட்டியுள்ளார்.

தனது கணவரின் நடவடிக்கை பீதி அடைய வைப்பதாக இருப்பதால் தன் பெற்றோரிடம் சொன்னார் சவீதா. அவர்கள் ஆலோசனைப்படி, தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்தார். அவர்கள் போலீசாருடன் விரைந்து வந்து பூசாரியை கைதுசெய்துள்ளனர்.

இதுபற்றி சவீதா கூறும்போது, ‘கடந்த 2000-மாவது ஆண்டில் மகாலிங்கேசஷை திருமணம் செய்தேன். அவர், தனது சொந்த இடத்தில் ருத்ரமுனீஸ்வரா கோயிலை கட்டி, அதில் பூசாரியாக இருக்கிறார். கோயிலில் புதையல் இருப்பதாக ஜோதிடர் கூறியுள்ளார். இரண்டு பெண்களை நரபலி கொடுத்தால்தான் அதை எடுக்க முடியும் என்று அவர் கூறியதால் என்னையும் என் மகளையும் நரபலி கொடுக்க முடிவு செய்தார். இரவில் மகள்களை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைப்பார். சமீப காலமாக ஒரு மகளை நிர்வாணமாக உட்கார வைத்து பூஜை செய்ய தொடங்கினார். இது அதிர்ச்சி அடைய வைத்தது. அவரது நடவடிக்கைகள் பற்றி போலீசில் புகார் செய்தேன். லஞ்சம் வாங்கிக்கொண்டு அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்தேன்’ என்று தெரிவித்துள்ளார். 

இந்தச் சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close