[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
  • BREAKING-NEWS நவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

மருத்துவ கல்லூரி மாணவிகளுக்கு மருத்துவர்களே பாலியல் தொல்லை ?

sexual-harassment-of-doctors-for-medical-collage-students-on-chennai

சென்னை திருவல்லிக்கேணி கஸ்துாரிபா அரசு மகப்பேறு மருத்துவமனையில் படிக்கும் மாணவிகளுக்கு மருத்துவர்கள் பாலியல் தொந்தரவு அளித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை திருவல்லிக்கேணி கஸ்துாரிபா அரசு மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவர்கள் கார்த்திகேயன், ரோஷன் ஆகியோர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், அதனை வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும் மருத்துவமனை கண்காணிப்பாளர் விஜயாவிடம் முதுநிலை மருத்துவ மாணவிகள் சிலர் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்தப் புகார் தொடர்பாக கண்காணிப்பாளர் விஜயா நடவடிக்கை எடுக்காததோடு, இதுபோன்ற விஷயங்களை பொறுத்துக் கொள்ளுமாறு மாணவிகளுக்கு அறிவுறுத்தியுதாக சந்தேகம் எழுப்பப்படுகிறது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களுக்கு இழைக்கப்பட்டு வரும் பாலியல் தொல்லை குறித்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர். புகார் அடிப்படையில் சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தலின்படி மருத்துவ இயக்குனர் எட்வின் ஜா  5 பேர் கொண்ட விசரணை குழு ஆமைத்துள்ளார். விசாரணையில் குழுவில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தலைமயில் அல்லி, அணுராதா, கீதா உள்ளிட்ட மருத்துவர்கள் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.

கஸ்துாரிபா அரசு மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்கள்  இளங்கோ,கார்த்திகேயன், ரோஷன் ஆகியோர் மீது புகார்களை விசாரித்து வருவதாகவும். மேலும் 1 வார காலத்தில் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close